மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறாரா சஞ்சு சாம்சன்? மினி ஏலத்திற்கு முன்னர் ஏற்பட்டுள்ள டிவிஸ்ட் – விவரம் இதோ

Sanju Samson and MI
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. திறமையான இளம் வீரர்கள் பலர் இருந்தும் ராஜஸ்தான் அணி பெற்ற இந்த பின்னடைவு அந்த அணியின் நிர்வாகத்தினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறாரா சஞ்சு சாம்சன்? :

அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் ரியான் பராக்கை தங்களது அணியின் புதிய கேப்டனாக மாற்ற முயற்சித்து வருவதால் அதிருப்தியில் இருக்கும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறுவார் என்று பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் சஞ்சு சாம்சனும் அந்த அணியில் இருந்து வெளியேறினால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

- Advertisement -

இருப்பினும் தனது தனிப்பட்ட முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சஞ்சு சாம்சன் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. அப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறும் அவர் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஒரு மிகப்பெரிய அணியில் இடம்பெறப்போகிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாகவே அதிகளவு வைரலாகி வருகின்றன.

அப்படி சஞ்சு சாம்சன் குறித்து தகவல்கள் வெளியான பின்னர் அவர் விளையாட இருக்கும் அந்த பெரிய அணி மும்பை இந்தியன்ஸ் அணிதான் என்று சமூகவலைதளத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணியும் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே அந்த அணியில் சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இருக்கும் வேளையில் சஞ்சு சாம்சனும் அந்த அணியில் இணைந்தால் மிகப்பெரிய பலம் ஏற்படும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தியா முழுவதும் பலத்த ஆதரவு இருக்கும் வேளையில் சஞ்சு சாம்சனும் இணைந்தால் தென்னிந்தியா முழுவதும் ஆதரவு கிடைக்கும் என்பதாலும் அவர் மும்பை அணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க : கேப்டன்களுக்கு பிடிச்சவங்களா இருந்தா மட்டும் தான் சேன்ஸ்.. ஓய்வுக்கு பிறகு விரக்தியை வெளிப்படுத்திய – அமித் மிஸ்ரா

ஆனாலும் அதன்பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அந்த அணியால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டே சாம்சன் தனது கரியர் முன்னேற்றத்திற்காகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நகர்வது குறித்த முடிவை எடுத்தாலும் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement