4, 6, 6, 6, 4, 6.. ஒரே ஓவரில் 32 ரன்ஸ்.. செஃபார்ட் மாஸ் சாதனை.. ரோஹித் அதிரடியில் டெல்லியை தெறிக்க விட்ட மும்பை

MI vs DC
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 20வது லீக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் மும்பையை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட டெல்லி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மும்பை அணியில் சூரியகுமார் யாதவ் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடினார்.

அதைத் தொடர்ந்து துவக்கிய மும்பைக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி அதிரடியாக 6 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்டார். அவர்களுடைய ஆட்டத்தால் முதல் 7 ஓவரில் மும்பை 80 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

மாஸ் சாதனை:
இருப்பினும் அப்போது அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 49 (27) ரன்களில் அக்சர் படேல் சுழலில் போல்டானார். அப்போது வந்த சூரியகுமார் யாதவ் டக் அவுட்டாகி தன்னுடைய கம்பேக் போட்டியில் ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய இசான் கிசானும் 42 (33) ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார்.

அப்போது வந்த திலக் வர்மா 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினார். அடுத்ததாக வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடினார். ஆனால் மறுபுறம் நிதானமாகவே விளையாடிய கேப்டன் பாண்டியா கடைசி நேரத்தில் 39 (33) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் அப்போது வந்த ரொமாரியா செபாஃர்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். அதே வேகத்தில் அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 4, 6, 6, 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிளை பறக்க விட்ட அவர் ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த மும்பை வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியின் 20வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற ரிங்கு சிங் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் குஜராத்துக்கு எதிராக ரிங்கு 5 சிக்சருடன் 30 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். முதலிடத்தில் ரவீந்திர ஜடேஜா (பெங்களூருவுக்கு எதிராக 36 ரன்கள்) உள்ளார்.

இதையும் படிங்க: சாரி விராட் கோலி பற்றி அப்படி வர்ணித்திருக்கக் கூடாது.. ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட இயன் பிஷப்

அந்த வகையில் 390 ஸ்ட்ரைக் ரேட்டில் 39* (10) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்த அவருடன் டிம் டேவிட் 45* (21) ரன்கள் எடுத்தார். அதனால் 20 ஓவரில் டெல்லியை தெறிக்க விட்ட மும்பை 234/5 ரன்கள் குவித்தது. மறுபுறம் நன்றாக துவங்கினாலும் கடைசியில் சொதப்பிய டெல்லிக்கு அதிகபட்சமாக அக்சர் பட்டேல், அன்றிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement