14 பந்தில் 50.. தினேஷ் கார்த்திக் அந்த ஹெல்ப் பண்ணாரு.. சிஎஸ்கேவை சாய்த்த திட்டம் பற்றி செபார்ட்

Romario Shepard 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதி நடைபெற்ற 52வது போட்டியில் சென்னை அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதையும் சேர்த்து 8வது வெற்றியைப் பெற்ற பெங்களூரு ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு விராட் கோலி 62, ஜேக்கப் பேத்தல் 55, ரொமாரியா செபார்டு 53* ரன்கள் எடுத்த உதவியுடன் 214 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய செபார்ட் கலீல் அகமதுக்கு எதிராக 19வது ஓவரில் 33 ரன்கள் அடித்தார். அத்துடன் கடைசி ஓவரில் 20 ரன்கள் அடித்த அவர் 14 பந்துகளில் ஐபிஎல் தொடரில் இரண்டாவது வேகமான அரை சதத்தை அடித்து சாதனை படைத்தார். அடுத்து விளையாடிய சென்னை அணி முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 211/5 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:

அதிகபட்சமாக இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே 94, ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள் எடுத்தனர். த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய செப்பார்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இது தம்முடைய நாள் என்று உணர்ந்ததால் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடிக்க முயற்சித்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பேட்டிங் சரியாக வராத சமயத்தில் ஆர்சிபி பேட்ஸ்மேன்களை அழைத்துச் சென்ற ஆலோசகர் தினேஷ் கார்த்திக் ஸ்பெஷல் பயிற்சிகளை கொடுத்தது உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்த நான் இறுதியாக பேட்டிங் செய்ய சென்றேன். எங்கள் அணிக்கு நல்ல ஃபினிஷிங் கொடுக்க விரும்பினேன் ”

- Advertisement -

டிகே உதவி:

“எனது பேட் ஸ்விங் மற்றும் பேஸ் ஆகியவையில் இருந்து தான் பவர் வருகிறது. பந்து நின்று வருவதால் உங்களது வடிவத்தை பிடித்து பேட்டை சுழற்றுமாறு டிம் டேவிட் சொன்னார். முதல் சில போட்டிகளில் எங்கள் பேட்டிங் துறை தோல்வியை சந்தித்தது. அப்போது தினேஷ் கார்த்திக் எங்களை அழைத்துச் சென்று ஸ்பெஷல் வேலையைக் கொடுத்தார். அது இன்று வேலை செய்தது”

இதையும் படிங்க: ஆர்சிபி’யிடம் தோல்விக்கான பொறுப்பை நானே ஏத்துக்கிறேன்.. அதை பிராக்டீஸ் பண்ணனும் செய்யல.. தோனி பேட்டி

“நான் ஸ்கோர் பற்றி சிந்திக்கவில்லை. என்னுடைய நாள் என்று உணர்ந்ததால் ஒவ்வொரு பந்தையும் பௌண்டரி அல்லது சிக்சர் அடிக்க நினைத்தேன். களத்திற்கு வந்த போது ரிலாக்ஸ் செய்து அடிக்குமாறு டிம் டேவிட் சொன்னதை கட்சிதமாக செய்தேன். எனது ஆட்டம் 50 – 50 வகையில் செல்லலாம் என்று வைத்திருக்கிறேன். இன்று பேட்டிங் நன்றாக வந்த போதிலும் பவுலிங் மோசமாக இருந்தது. இருப்பினும் புவனேஸ்வர், லுங்கி ஆகிய பவுலர்கள் சேற்றிலிருந்து எங்களைக் காப்பாற்றினார்” என்று கூறினார்.

Advertisement