ஆர்சிபி’யிடம் தோல்விக்கான பொறுப்பை நானே ஏத்துக்கிறேன்.. அதை பிராக்டீஸ் பண்ணனும் செய்யல.. தோனி பேட்டி

Ms dhoni vs rcb
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே மூன்றாம் தேதி நடைபெற்ற 52வது போட்டியில் சிஎஸ்கே அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவரில் 213/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 62, ஜேக்கப் பேத்தல் 55, ரொமாரியா செப்பார்டு 53* ரன்கள் எடுத்தார்கள்.

சென்னைக்கு அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய சிஎஸ்கே அணிக்கு சாய்க் ரசீத் 14, சாம் கரண் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் 3வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆயுஷ் மாத்ரே – ரவீந்திர ஜடேஜா வெற்றிக்கு போராடினார்கள்.

- Advertisement -

சென்னை தோல்வி:

ஆனால் அப்போது ஆயுஷ் மாத்ரே 94 (48) ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த தோனி 12, சிவம் துபே 8* ரன்கள் அடித்த போதிலும் ஃபினிஷிங் செய்யவில்லை. அதனால் ஜடேஜா 77* (45) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 211/5 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை போராடி பரிதாபமாக தோற்றது. பெங்களூருவுக்கு அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்து 8வது வெற்றியை உறுதியாக்கினார்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் சில யார்க்கர் பந்துகளை பவுண்டரிகளாக அடிக்காத தாம் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் பேட்டிங் செய்ய சென்ற போது தேவைப்பட்ட ரன்களையும் வீசப்பட்ட பந்துகளையும் வைத்து பார்க்கையில், நான் இன்னும் சில ஷாட்டுகளை அடித்திருந்தால் அழுத்தம் எளிதாகியிருக்கும் என்று கருதுகிறேன்”

- Advertisement -

தோனி ஏமாற்றம்:

“எனவே தோல்விக்கானப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். பெங்களூரு அணி நல்ல துவக்கத்தைப் பெற்ற போது இடையே நாங்கள் போட்டியை மீண்டும் இழுத்தோம். ஆனால் கடைசியில் அபாரமாக பேட்டிங் செய்தார். எங்கள் பவுலர்கள் எதை வீசினாலும் அதை அவர் அதிகமாக பயன்படுத்தும் திறனைக் கொண்டிருந்தார். நாங்கள் அதிகம் யார்க்கர் பந்துகளை வீசுவதற்கான பயிற்சி எடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: வெறும் 2 ரன்ஸ்.. 17 வயது சிங்கத்தின் போராட்டம் வீண்.. ஆர்சிபி’யிடம் சிஎஸ்கே போராடி வரலாறு காணாத தோல்வி

“ஏனெனில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் போது நீங்கள் யார்க்கர் பந்துகளை சார்ந்திருக்க வேண்டும். அதை விட்டால் லோ புல் டாஸ் அடுத்த சிறந்த பந்தாகும். நிறைய வேகத்தைக் கொண்டிருக்கும் பதிரனா போன்றவருக்கு அது கடினமானதாகும். அதனால் அவர் பவுன்சர் பந்தை வீசுகிறார். அது தவறும் போது பேட்ஸ்மேன்கள் அவரை அடிப்பார்கள். எனவே அது இயற்கையாக வந்தால் சிறப்பானது. இல்லையெனில் கடினமானது. இந்த புதிய தலைமுறையில் அது நீங்கள் பயிற்சி எடுக்க வேண்டிய விஷயமாகும். எங்களுடைய பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பேடல் ஷாட்டை விளையாடுவதில்லை. அதை ஜடேஜா அடிக்கக்கூடியவர் என்றாலும் நேராக அடிப்பதே அவருடைய பலம்” என்று கூறினார்.

Advertisement