ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் மூன்றாம் தேதி பெங்களூருவில் 52வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 213/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 62, ஜேக்கப் பேத்தல் 55, ரோமரியா ஃசெபார்ட் 53* ரன்கள் விளாசி மிரட்டிய நிலையில் சென்னைக்கு அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்த விளையாடிய சென்னைக்கு சாய்க் ரசீத் 14, சாம் கரண் 5 ரன்னில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மறுபுறம் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக புவனேஸ்வர் குமார் வீசிய ஓவரில் மட்டும் 4, 4, 6, 4 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை அவர் பறக்க விட்டது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
போராட்டம் வீண்:
அவருடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதில் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 17 வயது இளம் சிங்கம் வீரர் ஆயுஷ் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 94 (48) ரன்னில் அவுட்டானது திருப்புமுனையாக அமைந்தது.
ஏனெனில் அடுத்ததாக வந்த தேவால்ட் பிரேவிஸ் டக் அவுட்டான நிலையில் அதற்கடுத்ததாக வந்த போராடிய தோனி 12 (8) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த சிவம் துபே, நோபாலில் சிக்சர் அடித்த போதிலும் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது டபுள் மட்டுமே எடுத்தார். அதனால் ஜடேஜா 77* (45), துபே 8* (3) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 211/5 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
வரலாறு காணாத தோல்வி:
ஏற்கனவே இந்த வருடம் சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகள் கழித்து பெங்களூரு அணியிடம் சென்னை தோல்வியை சந்தித்திருந்தது. அதனால் இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியிடம் முதல் முறையாக சிஎஸ்கே ஒரே தொடரில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் தோல்விகளை பரிதாப சாதனையை சந்தித்துள்ளது. மறுபுறம் திரில் வெற்றி பெற்ற பெங்களூருவுக்கு அதிகபட்சமாக லுங்கி நெகிடி 3 டிக்கெட்டுகள் எடுத்தார்.
இதையும் படிங்க: அவசரப்படாம இருந்தா.. சூர்யவன்சி இந்தியாவுக்காக சச்சினின் அந்த சாதனையை உடைப்பாரு.. மைக்கேல் வாகன்
குறிப்பாக கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது யாஷ் தயாள் அபாரமாக பவுலிங் செய்து பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதையும் சேர்த்து 11 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்றுள்ள பெங்களூரு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதனால் அந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்று ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.



