அவசரப்படாம இருந்தா.. சூர்யவன்சி இந்தியாவுக்காக சச்சினின் அந்த சாதனையை உடைப்பாரு.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியை தொடர்ந்து ராஜஸ்தான் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இருப்பினும் அந்த அணிக்கு 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி கிடைத்தது ராஜஸ்தான் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவர் ஏற்கனவே அண்டர்-19 அளவில் இந்தியாவுக்காக விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அந்த வாய்ப்பில் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங் செய்ததால் அவரை ராஜஸ்தான் அணி 1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்து வாங்கியது. அந்த அணிக்காக அறிமுகமான சூரியவன்சி ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் தனது அறிமுகப் போட்டியிலேயே முதல் பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

சச்சினை முந்துவார்:

அதை விட குஜராத்துக்கு எதிரானப் போட்டியில் மிரட்டலாக பேட்டிங் செய்த வைபவ் 101 (38) ரன்கள் விளாசி ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் வேகமான சதத்தை (35 பந்துகள்) அடித்த இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

அதனால் வருங்காலங்களில் இந்தியாவுக்காகவும் வைபவ் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வைபவ் சூர்யவன்சியை இந்தியாவுக்காக அவசரப்பட்டு விளையாட வைக்கக்கூடாது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் இங்கிருந்து வளர்ந்து வைபவ் விரைவில் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வாகன் கணிப்பு:

அத்துடன் இந்தியாவுக்காக இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர் என்ற சச்சின் சாதனையை சூரியவன்சி உடைப்பார் என்றும் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தியா நிறைய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதால் நிறைய நிறைய நேரங்களில் அவர்களுடைய தேர்வுகள் டெஸ்ட் அணியை ஒன்றுடன் ஒன்று மீறுகிறது”

இதையும் படிங்க: சிஎஸ்கேவை ஜெய்ச்சுட்டோம்ன்னு மாலத்தீவில்.. மிதந்த ஹைதராபாத்துக்கு இது வேணும்.. ஹர்பஜன் கிண்டல்

“அங்கே வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் அவரை அவசரப்படுத்தாதீர்கள், விளையாட வையுங்கள் என்பதே என்னுடைய ஆலோசனையாகும். ஐபிஎல் தொடரில் நிறைய அழுத்தம் இருக்கும். முதலில் அவரை நீண்ட காலம் விளையாட விடுங்கள். அதைச் செய்தாலே அவர் இந்தியாவுக்காக 14, 15, 16 வயதில் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். இந்தியாவுக்காக விளையாடுவதில் அவர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைப்பார் என்று நான் கருதுகிறேன். ஆனால் அவரை நான் அவசரப்படுத்த மாட்டேன்” என்று கூறினார்.

Advertisement