சிஎஸ்கேவை ஜெய்ச்சுட்டோம்ன்னு மாலத்தீவில்.. மிதந்த ஹைதராபாத்துக்கு இது வேணும்.. ஹர்பஜன் கிண்டல்

Harbhajan Singh
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் போட்டியிலேயே ராஜஸ்தானை அடித்து நொறுக்கி 286 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அதனால் கடந்த வருடத்தை போலவே தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் அதற்கடுத்த போட்டிகளில் திண்டாடியது. இருப்பினும் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அப்போது ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல எஞ்சியுள்ள போட்டிகளில் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் காரணமாக ஹைதராபாத் அணி தொடர்ந்து அசத்துவதற்காக பயிற்சிகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்யாத ஹைதராபாத் அணியினர் சென்னையிலிருந்து நேராக மாலத்தீவுகளுக்கு மினி சுற்றுலா சென்றனர்.

- Advertisement -

மாலத்தீவில் மிதப்பு:

அங்கே நீச்சல் குளம் மற்றும் கடற்கரையில் ஜாலியான போட்ட அவர்கள் ரிலாக்ஸ் செய்தனர். குறிப்பாக அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தங்களுடைய வீரர்களுக்கு புத்துணர்ச்சியளிக்க ஹைதராபாத் அணி நிர்வாகமே அந்த சிறிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில் மாலத்தீவுகளில் சில நாட்கள் ஓய்வெடுத்த ஹைதராபாத் அணியினர் அடுத்ததாக அஹமதாபாத் நகருக்கு சென்றனர்.

அங்கே மாலத்தீவுகளில் கிடைத்த புத்துணர்ச்சியால் குஜராத்தை அடித்து நொறுக்கி ஹைதராபாத் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் 225 ரன்கள் அடிக்க முடியாத ஹைதெராபாத் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட ஹைதெராபாத் அணி 100% லீக் சுற்றுடன் வெளியேறி விடும்.

- Advertisement -

இது வேணும்:

இந்நிலையில் மாலத்தீவுக்கு சென்று வந்து தோற்ற ஹைதராபாத் பற்றி முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா ஜியோஸ்டார் சேனலில் விமர்சித்தது பின்வருமாறு. “ஹைதெராபாத் அணி உடலளவில் ஹைதராபாத் நகரிலும் மனதளவில் இன்னும் மாலத்தீவுகளிலும் இருப்பது போல் தெரிகிறது. என்னை அவர்களுடைய பௌலிங் சுமாராக இருந்தது. ஃபீல்டிங் அதைவிட சுமாராக இருந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: 6, 6, 4, 6, 6, 4.. கிங் கோலி இரட்டை உலக சாதனை.. சிஎஸ்கே தோல்வியை உறுதியாக்கிய ஃசெபார்ட் சரவெடி சாதனை

அதே நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜன் சிங். “அந்தப் பந்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை தடுப்பதற்காக ஹைதராபாத் ஃபீல்டர் டைவ் அடித்தார். ஆனால் அது மாலத்தீவுகளில் அவர் அடித்த டைவ் போல நன்றாக இல்லை. அவர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் நிறைய டைவ் அடித்திருப்பார்கள். ஆனால் அதை இங்கே தரையில் அடிப்பதை பார்க்க முடியாது” என்று நேரலையில் கிண்டல் செய்யும் வகையில் பேசினார்கள்.

Advertisement