- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சின் கங்குலி ஜோடியின் சாதனையை சமன் செய்த ரோஹித் கோலி ஜோடி – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை இழந்துவிட்ட வேளையில் கடைசி போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது. இந்த ஆஸ்திரேலிய தொடர் ஆரம்பித்ததில் இருந்து அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தான் அதிகளவில் இருந்தது.

சச்சின் கங்குலி சாதனையை சமன் செய்த ரோஹித் கோலி :

முதல் போட்டியில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தாலும் இரண்டாவது போட்டியின் போது ரோகித் சர்மா 73 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். அதே வேளையில் முதலிரண்டு போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்டாகி இருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இவர்கள் இருவரும் எவ்வாறு செயல்படப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் அவர்கள் இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அந்த வகையில் இன்று சிட்னி நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 236 ரன்களுக்கு சுருளவே இந்திய அணி 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடியது.

அதன்படி விளையாடிய இந்திய அணி தங்களது முதல் விக்கட்டை 69 ரன்களுக்கு இழந்தது. முதல் விக்கெட்டாக 24 ரன்கள் அடித்த சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது ஜோடி மேலும் விக்கெட் சரியாமல் 38.3 ஓவர்களில் 237 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா 121 ரன்களுடனும் விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது ஜோடி அமைத்த பார்ட்னர்ஷிப் மூலம் முன்னாள் இந்திய ஜோடியான சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலி ஆகியோரது மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

இதையும் படிங்க : சிட்னி சதம் மூலம் முதல் வீரராக சர்வதேச போட்டிகளில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

இன்றைய போட்டியில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் சேர்ந்து 169 பந்துகளில் 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர்களது 12-வது 150+ பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன்னதாக இந்த சாதனையை சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நிகழ்த்தி இருந்த வேளையில் அவர்களது இந்த சாதனையை தற்போது ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சமன் செய்துள்ளனர்.

- Advertisement -