நான் ஓய்வு பெறுவதற்கு முன் இதனை சாதித்துவிட்டே செல்வேன் – ரோஹித் உறுதி

Rohith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரரான ரோகித் சர்மா தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் சாதிக்க முடியாது என்று நினைத்த இரட்டை சதத்தை மூன்று முறை அடித்து அசத்தியவர் ரோகித் சர்மா. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்து விளாசினார்.

Rohith

- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களும் ஒருநாள் ஓய்வுபெற்ற தீர வேண்டும் என்ற நிலைமை வரும் அப்படிதான் ஏற்கனவே சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி என அனைவருக்கும் அந்த நிலைமை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான தோனி தற்போதைய ஓய்வு நிலையில் உள்ளார்.

இந்நிலையில் 32 வயதாகும் ரோகித்சர்மா தானும் ஓய்வு பெறும் நிலை வரும் அதற்கு முன்னர் இதனை சாதிக்க வேண்டும் என்று தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ரோகித் சர்மா கூறியதாவது : இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன் என்று தெரியவில்லை. அது குறித்து எந்த திட்டமும் என்னிடம் இல்லை.

Rohith-1

தற்போதைக்கு என்னுடைய சிந்தனையெல்லாம் இந்திய அணிக்கு சில உலக கோப்பைகளை வென்று தரவேண்டும். தற்போதைய உள்ள இந்திய அணி சாதித்துள்ளது மிகவும் மகிழ்ச்சிதான் தனிப்பட்ட சாதனைகளைவிட விட ஒரு அணியாக நாங்கள் வெற்றி பெறுவதே என்னுடைய முதல் இலக்கு. நான் ஓய்வு பெறுவதற்குள் நிச்சயம் இந்திய அணிக்கு சில உலக கோப்பையை பெற்றுத் தருவேன் என்று ரோஹித் உறுதியாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement