நியூசிலாந்து அணிக்கெதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – புதுகேப்டன் ரோஹித் பேட்டி

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDvsNZ 1

- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எவ்வாறு விளையாடப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வெற்றியை ருசித்தது. இந்திய அணியின் முழுநேர கேப்டனாக முதல் முறையாக பதவி ஏற்றுள்ள ரோகித் சர்மா இந்த வெற்றி குறித்து பேசுகையில் கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை. இது எங்கள் அணி வீரர்களுக்கு நல்ல ஒரு பாடம்.

ஏனெனில் நமது அணியில் உள்ள வீரர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் விளையாடியது கிடையாது. எனவே இந்த போட்டி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு போட்டியாக அமைந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் பவர் ஹிட்டிங் மட்டுமின்றி பீல்டர்கள் இல்லாத இடத்தில் பந்தை விரட்டி ரன்களை சேகரிக்க வேண்டியது அவசியம் என்பது இந்த போட்டியில் தெரியவந்துள்ளது. இருப்பினும் ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

Bhuvi

சில வீரர்கள் அணியில் இல்லை என்றாலும் புது வீரர்கள் அவர்களது திறமையை அறிந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். என்னை பொருத்தவரை இந்த போட்டிக்கு வெற்றி போட்டியின் வெற்றிக்கு காரணம் யாதெனில் முதல் இன்னிங்சின் போது கடைசி 3-4 ஓவர்கள் நாங்கள் நியூசிலாந்து அணியை சரியான பந்து வீச்சினால் கட்டுப்படுத்தி உள்ளோம். இந்த போட்டியின் முடிவில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : முறைத்து நின்ற மார்ட்டின் கப்டில். திருப்பி கொடுத்த தீபக் சாகர் – மைதானத்தில் நடந்த சண்டை

ஒரு சில பவுலர்களை குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. அனைவருமே சிறப்பாக பந்து வீசினார்கள் அதேபோன்று சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். அவரால் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாட முடியும். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை இந்த போட்டியில் காண்பித்துள்ளார் என ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement