முறைத்து நின்ற மார்ட்டின் கப்டில். திருப்பி கொடுத்த தீபக் சாகர் – மைதானத்தில் நடந்த சண்டை

Deepak
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். அதேபோன்று வில்லியம்சனுக்கு பதிலாக களமிறங்கிய சேப்மன் 63 ரன்களை குவித்தார். பின்வரிசையில் வந்த யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காததால் நியூசிலாந்து அணி 15 ரன்கள் வரை குறைவாகவே அடித்தது எனலாம்.

- Advertisement -

பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 62 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் நியூசிலாந்து துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஒரு சிறிய சுவாரசியமான நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த கப்டில் தீபக் சாஹர் ஓவரிலும் ஒரு பிரமாண்டமான சிக்சர் அடித்து விட்டு பந்தினை பார்க்காமல் நேராக தீபக் சாகரை முறைத்தபடி பார்த்தார்.

- Advertisement -

இதையும் படிங்க :வீடியோ : அருமையான இன்-ஸ்விங் பந்தின் மூலம் ஸ்டம்பை தெறிக்கவிட்ட புவி – திகைத்து நின்ற நியூசி வீரர்

அதன் பின்னர் அடுத்த பந்திலேயே அவரை ஆட்டம் இழக்க வைத்த தீபக் சஹர் விக்கெட்டை எடுத்ததை கொண்டாடாமல் கப்திலை முறைப்படி நின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற இந்த சுவாரஸ்யமான நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement