வீடியோ : அருமையான இன்-ஸ்விங் பந்தின் மூலம் ஸ்டம்பை தெறிக்கவிட்ட புவி – திகைத்து நின்ற நியூசி வீரர்

Bhuvi

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

INDvsNZ 1

அதன்படி நியூசிலாந்து அணியானது முதலில் விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான டேரல் மிட்சலை முதல் பந்திலேயே ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி டேரல் மிட்சல் சந்தித்த முதல் பந்திலேயே புவனேஷ்வர் குமார் தனது அபாரமான இன் ஸ்விங்கிங் டெலிவரி மூலம் அவரை கிளீன் போல்டாக்கினார். அவரது இந்தப் பந்தை கணிக்க முடியாமல் திகைத்தபடி மிட்சல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் எனக்கான ரோல் இதுதான். அதை செய்ய நான் தயார் – அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் பேட்டி

சமீபகாலமாகவே காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் தனது பார்மில் சறுக்கலை சந்தித்த புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Advertisement