- Advertisement -
ஐ.பி.எல்

தோல்வியின் விளிம்பிற்கு சென்று இந்த போட்டியில் பெற்ற அற்புதமான வெற்றிக்கு இவர்களே காரணம் – ரோஹித் புகழாரம்

சென்னை மைதானத்தில் நேற்று நடைபெற்ற 5ஆவது டி20 லீக் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த போட்டியாக மாறியது. ஏனெனில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் கொல்கத்தா அணி அதனை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெறும் என்று கருதி இந்த போட்டியில் சுவாரஸ்யம் இருக்காது என்று நினைத்தனர். ஆனால் சென்னை மைதானம் இரண்டாவது இன்னிங்சின் போது பவுலர்களுக்கு சாதகமாக மாறி போட்டியை சுவாரசிய படுத்தியது.

இந்த போட்டியின் சேஸிங்கில் முதல் 15 ஓவர்கள் வரை கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை வெற்றி இலக்கிற்கு அருகில் கொண்டு சென்றனர். 28 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட போது இந்த போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. ஒரு கட்டத்தில் எளிதாக ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதி ஐந்து ஓவர்களில் அவர்களால் 20 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

- Advertisement -

கொல்கத்தா அணியை சேர்ந்த ராணா, மோர்கன், ஷாகிப், ரசல் என முக்கிய வீரர்கள் அனைவரும் தேவையின்றி ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதிவரை களத்தில் இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆல் கூட இந்த சேப்பாக்கம் மைதானத்தில் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது. எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி ஒரு மோசமான தோல்வியை இறுதியில் சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் மீண்டு வந்தது சிறப்பான ஒரு விடயமாக அமைந்தது. எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டு இந்த போட்டியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்துள்ளனர். இதுபோன்ற ஒரு போட்டியை நீங்கள் பார்ப்பது சற்று கடினம் தான். இந்த போட்டியின் மூலம் நிறைய நம்பிக்கை கிடைத்திருக்கிறது இதை அப்படியே நாங்கள் கொண்டு செல்ல விரும்புகிறோம். எங்கள் அணியில் ராகுல் சாகர் மிடில் ஓவரில் வந்து பந்துவீசி எடுத்த விக்கெட்டுகள் மிக முக்கியமாக அமைந்தது.

அதே போன்று க்ருனால் சிறப்பாக பந்து வீசினார். ஒட்டுமொத்தமாக அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாக இதை நான் கருதுகிறேன். இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக ஆட வேண்டிய ஒரு நிலையை இந்த போட்டியில் இருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் 15 முதல் 20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பார்மை தொடர்ந்து வருகிறார். அவர் பயமின்றி பாசிட்டிவாக விளையாடி வருவது எங்கள் அணிக்கு பலமாக அமைகிறது என ரோஹித் கூறியது குறிப்பிடடதக்கது.

- Advertisement -
Published by