Rohith Sharma : டெல்லி அணியை தோற்கடிக்க இவர்களது பந்துவீச்சே காரணம் – ரோஹித் பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

rohith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை அடித்தது. மும்பை அணி சார்பில் அதிககபட்சமாக க்ருனால் பாண்டியா 37 ரன்களும், டிகாக் 35 ரன்களும் மற்றும் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஹார்டிக் பாண்டியா 32 ரன்களை அடித்தார்.

பிறகு 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தவான் 35 ரன்களை குவித்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர் ராகுல் சஹர் 4 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Hardik

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் கூறியதாவது : முதல் இரண்டு ஓவர்கள் ஆடியதும் தெரிந்தது இந்த மைதானத்தில் 140 ரன்கள் என்பது போதுமானது. முதலில் நாங்கள் சிறப்பாக ஆடியதும் பின்வரிசையில் பவர் ஹிட்டர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த மைதானத்தில் 168 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமானது. பின்வரிசையில் ஹார்டிக் பாண்டியா சிறப்பாக ஆடி ரன்களை அதிகரித்தார்.

ragul chahar

எங்கள் அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் இந்த இலக்கிற்குள் டெல்லி அணியை சுருட்டிவிடுவார்கள் என்று தெரியும். அதேபோன்று சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். 140-150 ரன்கள் போதும் என்ற நிலையில் எங்களது அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டனர் என்று ரோஹித் சர்மா கூறினார்.

Advertisement