இதுபோன்ற சேஸிங்கை நான் பாத்ததே இல்ல. இவரால் மட்டும் இது சாத்தியம் – சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கு பிறகு ரோஹித் பேட்டி

rohith
- Advertisement -

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 27வது லீக் போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. ஏனெனில் கிட்டத்தட்ட இரு அணிகளும் சேர்ந்து சுமார் 440 ரன்கள் வரை அதுமட்டுமின்றி சிக்சர் மழையாக பொழிந்ததால் இந்த போட்டி இறுதி வரை சுவாரஸ்யமாக நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களின் முடிவில் 218 ரன்களை குவிக்க 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி பொல்லார்ட்டின் அசத்தலான ஆட்டம் காரணமாக வெற்றிபெற்றது.

Dekock

- Advertisement -

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பொல்லார்ட் 34 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் போட்டி முடிந்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த வெற்றி குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதை இந்த பதிவில் காணலாம். போட்டி முடிந்த பின்பு வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியே நான் பங்கேற்ற டி20 போட்டிகளில் சிறந்த ஒரு போட்டி என்று கூறுவேன்.

ஏனெனில் இது போன்ற ஒரு சேசிங்கை நான் இதற்கு முன் கண்டதில்லை. அதுமட்டுமின்றி இந்த ஒரு இன்னிங்ஸ் பொல்லார்ட்டின் சிறந்த இன்னிங்ஸ். அவருடைய பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது. வெளியில் இருந்து பார்க்கும் போது அவர் விளையாடிய விதம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் கொடுத்த உழைப்பு சிறப்பாக இருந்தது. இந்த மைதானம் சிறியதாக இருந்தது. இலக்கு அதிகமாக இருந்ததாலும் பாசிட்டிவ்வாக நினைத்து பேட்டிங் செய்ய துவங்கினோம்.

pollard 1

மேலும் 20 ஓவர்கள் வரை எங்களால் முடியும் என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக் கொள்ள விரும்பினோம். அதன்படி எங்கள் அணிக்கு பேட்டிங்கின்போது சிறப்பான துவக்கம் கிடைத்தது அதன்பின்னர் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் நாங்கள் இடைவெளியின் போது இந்த மைதானம் சிறப்பாக இருக்கிறது, நமது அணியும் அதிரடியான வீரர்கள் கொண்ட அணிதான். எனவே நாம் களம் இறங்கியது நமது அதிரடியை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தவேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

அதன்படி துவக்கத்தில் எங்களது பாட்னர்ஷிப்பும் சரி, மிடில் ஓவர்களில் க்ருனால் பாண்டியா மற்றும் பொல்லார்ட்டும் பாட்னர்ஷிப்பும் சரி இந்த டார்கெட்டை நெருங்க உதவியது. மேலும் இறுதியில் சிறப்பாக விளையாட நாங்கள் வெற்றியும் பெற்றோம். இந்த போட்டியில் எங்களது பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தனர். ஆனாலும் இதுபோன்ற மைதானங்களில் பவுலர்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement