இவர்கள் இருவரும் மீண்டும் வந்துவிட்டதால் அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் கொஞ்சம் உஷாராக தான் ஆடனும் – ரோஹித் ஓபன் டாக்

Rohith
- Advertisement -

இந்திய அணி சென்ற வருடம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதுதான் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றிய முதல் டெஸ்ட் தொடர் ஆகும். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வீழ்த்திய முதல் ஆசிய நாடு என்ற சாதனையும் இந்திய அணி படைத்தது குறிப்பிடத்தக்கது.

Ind-1

- Advertisement -

அந்த தொடரின் போது அந்த அணியின் முக்கிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அணியில் இல்லை. எப்படி இருந்தாலும் இந்தியா வென்றது தான் கணக்கு. இந்நிலையில் வருகிற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த அணியில் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப உள்ளனர்.

இதுகுறித்து தற்போது ரோகித் சர்மா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடப்போகும் தொடரை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் துரதிஸ்டவசமாக எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. தவறான நேரத்தில் இந்த காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட காத்திருக்கிறேன்.

Warner

மேலும் ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மீண்டும் அணிக்குள் வருகின்றனர். இதனால் சென்ற வருடத்தில் சென்றதை விட இந்த வருடம் மிகவும் சவாலானதாகவும், வித்தியாசமாகவும் இருக்கப்போகிறது என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.

- Advertisement -

ஏற்கனவே வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாததால் தான் இந்திய அணி வெற்றிபெற்றது என்று பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் ரோஹித் மீண்டும் ஸ்மித் மற்றும் வார்னர் குறித்து பேசியுள்ளதால் வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடர் நிச்சயம் இந்திய அணியின் பலத்தை சோதிக்கும் தொடராக அமைய உள்ளது.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பந்துவீச்சு வேறலெவலில் உள்ளது. அதிலும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பலமாக உள்ளது. அதன்காரணமாகவே பல தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றது என்பதும் முற்றிலும் உண்மையே ஆதலால் இந்த தொடர் இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு கடுமையான தொடராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement