
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உள்ளதால் சொந்த மண்ணில் அவர்களை வாஷ் அவுட் செய்து அசத்தியுள்ளது.
ரோஹித் முதல்முறையாக முழுநேர கேப்டனாக செயல்பட்ட இந்த தொடரில் இந்திய அணி இப்படி 3 க்கு 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 265 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியனாது 169 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நான் எப்போதுமே அணியின் வெற்றியை மட்டுமே எதிர்பார்ப்பவன். நிச்சயம் கேப்டன்சி ரெக்கார்டு நான் எப்போதும் பெரிதாக நினைத்தது கிடையாது. இந்த தொடரில் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன்.
இந்த தொடர் முழுவதுமே எங்களது அணி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த தொடரில் இளம் வீரரான பிரசித் கிருஷ்ணா அற்புதமாக பந்துவீசினார். அவரது வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை சிறப்பாக உள்ளது. அதே போன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் எப்போதுமே இந்திய அணியில் முக்கியமான வீரர்கள். அவர்கள் இருவருமே மீண்டும் சிறப்பாக திரும்பி இருப்பது முக்கியமான ஒன்று. நிச்சயம் இந்த வெற்றியை நாங்கள் மீண்டும் தொடர்வோம் என்று நம்புகிறேன் என்று ரோஹித் கூறினார்.
இதையும் படிங்க : எனக்கு அடுத்து ஐபிஎல் ஏலத்தை நடத்துபவர் ஒரு இவர்களாக தான் இருக்கனும் – மனம் திறக்கும் ரிச்சர்ட் மாட்லி
மேலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது. துவக்கத்திலேயே 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நாங்கள் சிக்கிய நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தேடி தந்தது இன்னும் அணிக்கு வலு சேர்த்துள்ளது என்று ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.