நம்ம டீம்ல எல்லாருமே டேலன்ட் தான். நாம பண்ண வேண்டியது ஒரே விஷயம் தான் – ரோஹித் மகிழ்ச்சி

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருவது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த வேளையில் நேற்று தர்மசாலா மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நடைபெற்றது.

INDvsSL

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 183 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணியானது ஷ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பான பேட்டிங் காரணமாக 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்குப் பிறகு வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த வெற்றி நமக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அற்புதமாக விளையாடியது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. கடைசியாக நடைபெற்ற சில போட்டிகளிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளதால் இந்த வெற்றி நமக்கு மகிழ்ச்சியான ஒன்று தான்.

Shreyas

அதேபோன்று இந்திய அணியில் தற்போது திறமையான பல பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நமது அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே நல்ல டேலண்ட் உடையவர்கள் தான். அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்கும் போது நிச்சயம் அவர்களிடம் இருந்து நல்ல ஆட்டம் வெளிவரும். நாம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய ஒரு விடயத்தை மட்டுமே செய்ய வேண்டும். மற்றபடி நமக்கு தானாக வெற்றிகள் கிடைக்கும்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரிடம் இருந்து இது போன்று ஒரு சிறப்பான ஆட்டம் வெளிவரும் என்பது நிச்சயம் தெரிந்த ஒன்று தான். அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். மற்றபடி அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே நல்ல திறமைசாலிகள் தான். ஒவ்வொரு முறையும் வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை வெளிக் கொணர்வது இந்திய அணிக்கு நல்ல பலத்தை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : ரிஷப் பண்டை விட பெரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எங்க டீம்ல இருக்காரு – சல்மான் பட் கருத்து

நிச்சயம் இனிவரும் போட்டிகளிலும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அனைவரும் இதே போன்று சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. ஒரு அணியாக நாம் அனைத்து வீரர்களுக்கும் ஊக்கம் கொடுத்து அவர்களை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என ரோகித் சர்மா கூறினார்.

Advertisement