எங்களை பத்தி அவங்க நினைக்காத போது அவங்கள பத்தி நாங்க ஏன் நினைக்கனும் – இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த ரோஹித்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இத்தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டியிலும் சென்னை மைதானம் முழுவதுமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததாகவும், இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத மோசமான நிலையில் இருந்ததாகவும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பல வெளிநாட்டு வீரர்களும் விமர்சித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளும் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னை ஆடுகளம் குறித்து விமர்சனங்களை வைத்த பலருக்கும் தற்போது ரோகித் சர்மா செய்தியாளர்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் :

பிட்ச் என்பது இரு அணிகளுக்குமே பொதுவாக தயார் செய்யப்படும் ஒன்று. ஆனால் ஏன் இது குறித்து அதிகம் விவாதிக்கப் படுகிறது என தெரியவில்லை. இந்தியாவில் இருக்கும் அனைத்து பிட்ச்களும் காலம் காலமாக இதேபோன்றுதான் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை. எதிர்காலத்திலும் இந்த நடைமுறை மாறாது என்றே நான் நினைக்கிறேன்.

rohith 1

ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கும் ஒரு சாதகமான அம்சம் இருக்கும் அதே போன்று இந்திய நாட்டிற்கும் ஒரு சாதகமான அம்சம் இருக்கும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : வெளிநாட்டில் நாங்கள் விளையாடும் போது எங்களைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்க்காத போது நாங்கள் ஏன் அவர்கள் குறித்து நினைத்துப் பார்க்கவேண்டும். வீரர்களின் திறமையை பார்க்க வேண்டும். அவர்களின் திறமையை விவாதிக்க வேண்டுமே தவிர பிட்ச்சை குறை சொல்வது, பிட்ச் குறித்து விவாதிப்பது தேவையற்ற ஒன்று என்று ரோஹித் கூறினார்.

Rohith

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அப்படி இல்லை என்றால் ஐசிசியின் இடம் முறையிட்டு உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலுமே ஒரே மாதிரி பிட்ச்களை உருவாக்க புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என விமர்சகர்களுக்கு நேரடியாக ரோஹித் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement