இந்திய அணியில் என்னை விட மோசமான வீர்ர் யாரும் கிடையாது – ரோஹித் இப்படி கூற காரணம் என்ன தெரியுமா ?

Rohith
- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை வகித்து வருகிறார். அவரது தலைமையிலான மும்பை அணி இதுவரை 4 முறை கோப்பைகளை வென்று சாதித்துள்ளது. மேலும் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய ஐபிஎல் கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா தன்வசம் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இவரது தலைமையில் மும்பை அணி மிகச்சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் இந்திய அணிக்கு கோலி கேப்டனாக விளையாடாத போட்டிகளில் கேப்டனாக விளையாடும் ரோகித் அந்த போட்டிகளில் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் தேடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கூட கோலி ஒரு நாள், டெஸ்ட், டி20 என மூன்று வகை போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருவதால் அவருக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால் டி20 போட்டிகளுக்கு ரோஹித்தை கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. அந்த அளவிற்கு ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் பலரும் ரசிக்கும் விதமாக இருந்து வருகிறது.

Rohith-2

இந்நிலையில் அப்படி தான் சிறப்பான வெற்றிகரமான கேப்டனாக செயல்படுவதற்கான காரணங்களை சிலவற்றை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அதன்படி அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : ஒரு அணிக்கு கேப்டனாக நான் செயல்படும்போது அந்த அணியிலேயே நான் தான் முக்கியம் இல்லாத நபர் எனக்கு நானே நினைத்துக் கொள்வேன்.

Rohith

ஏனெனில் அப்போதுதான் அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் முக்கியமானவர்களாக தெரிவார்கள் அவ்வாறு ஒரு கேப்டன் மற்ற வீரர்களை அணுகும் போது நிச்சயம் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை கொண்டுவரமுடியும். இதுவே எனது வெற்றியின் ரகசியம் என்றும் ரோஹித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement