கோலி வேர்ல்டு பெஸ்ட் கேப்டன் தான். இருந்தாலும் என்னை பொறுத்தவரை இவர்தான் சிறந்த கேப்டன் – ரோஹித் ஓபன் டாக்

Rohith-2
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று அந்தத் தொடரை 5 – 0 என்ற கணக்கில் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக இந்திய அணிக்கு செயல்பட்டார். இருப்பினும் காயம் காரணமாக முதல் பாதியில் வெளியேறிய அவர் இரண்டாம் பாதியில் விளையாடவில்லை. இந்நிலையில் இந்த தொடர் வெற்றி குறித்தும் இந்திய அணி குறித்தும் பேட்டி ஒன்றினை ரோஹித் அளித்துள்ளார்.

IndvsNz

- Advertisement -

இந்திய அணிக்கு சிறந்த கேப்டன் யார் என்பதையும் அந்தப் பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார் இந்திய அணிக்கு கிடைத்த கேப்டன்களில் மிக முக்கியமானவர்கள் என்று கருதப்பட்ட கபில்தேவ் முதல் தோனி வரை பல்வேறு கேப்டன்களை இந்திய அணி சந்தித்துள்ளது. தற்போது அனைவரையும் வெற்றிகரமாக முறியடித்து வரும் கேப்டனாக கோலி சாதனை படைத்து வருகிறார். ஆனாலும் கோலியின் தலைமையில் ஐசிசி தொடரை இந்தியா ஒருமுறைகூட வென்றதில்லை.

இந்நிலையில் ஐசிசி நடத்தும் 3 உலக கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக தோனி திகழ்கிறார். தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் அது குறித்து பேசிய ரோகித் சர்மா கூறியதாவது : இதுவரை நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் மிகச் சிறந்த கேப்டன். மேலும் அவருடைய அமைதியான குணம் மற்றும் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதம் ஆகியவை அவரிடமிருந்து எனக்கு மிகவும் பிடிக்கும்.

Kohli

நான் ஒன்பது ஆண்டுகளாக இந்திய அணியில் எவ்வாறு செயல்பட்டு வருகிறேன் என்றும் எனக்குத் தெரியும் அதேபோன்று தற்போது தோனி அணியில் இல்லை என்றாலும் எப்படி அவரின் கருத்துக்கள் இந்திய அணிக்கு கை கொடுக்கின்றன என்பது பற்றியும் எனக்கு தெரியும். தோனி எப்பொழுதும் அமைதியாக இருக்கக் கூடிய குணம் கொண்டவர் அந்த விடயம் இந்தியாவுக்கே தெரியும்.

dhoni

அவரின் அந்த குணம் தான் அவரை எவ்வளவு இக்கட்டான கட்டத்திலும் சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. இதுவரை இந்திய அணிக்கு கிடைத்த கேப்டன்களில் தோனி மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்று நான் கூறுவேன். இந்திய அணிக்காக அவர் அனைத்து கோப்பைகளையும் பெற்று தந்துள்ளார். மேலும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் நான் பார்த்ததில் தோனிதான் மிகச் சிறந்த கேப்டன் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement