கேம்னு வந்தா இதெல்லாம் நடக்கும் தான். அதுக்காக அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் – ஆறுதல் சொன்ன ரோஹித்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஏற்கனவே 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

shreyas iyer

- Advertisement -

அதன்படி பந்துவீச்சை துவங்கிய இந்திய அணியானது துவக்கத்தில் ரன்களை சிக்கனமாக வழங்கி அருமையான பந்துவீச்சில் ஈடுபட்டது. குறிப்பாக 15 ஓவர்கள் வரை இலங்கை அணியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய அணி பவுலர்கள் 103 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டனர். அதாவது குறிப்பாக 90 பந்துகளை இலங்கை வீரர்கள் சந்தித்த வேளையில் 103 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தனர்.

ஆனால் அதன் பிறகு கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை பிரித்து எடுத்த இலங்கை வீரர்கள் கடைசி 5 பந்துகளில் 80 ரன்கள் குவித்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 183 என்கிற மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு சென்றது. பின்னர் 184 ரன்கள் எடுத்தால் என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சிறப்பான பேட்டிங் காரணமாக 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

bumrah

இருப்பினும் இந்திய அணி டெத் ஓவர்கள் என அழைக்கப்படும் கடைசி 5 ஓவர்களில் அதிகளவு ரன்களை விட்டுக் கொடுத்தது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து டெத் பவுலிங்கில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பந்துவீச்சாளர்கள் மீது எந்த ஒரு தவறையும் நான் சொல்லமாட்டேன். ஏனெனில் கிரிக்கெட் என்றால் இது போன்று நடப்பது இயல்பு தான்.

- Advertisement -

நாங்கள் பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினோம். அதுமட்டுமின்றி முதல் 15 ஓவர்கள் வரை நாங்கள் அவர்களை கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தோம். கடைசி 5 ஓவர்களில் 80 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு பிழைதான் இருந்தாலும் அதை குற்றமாக செல்லக் கூடாது. ஏனெனில் போட்டியின் சூழ்நிலையை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். எந்த அணியாக இருந்தாலும் கடைசி 5 ஓவர்களில் ரன்களை சேர்க்கத்தான் முயற்சிப்பார்கள்.

இதையும் படிங்க : இன்றைய 3 ஆவது டி20 போட்டியில் இந்திய வீரரான இவர் விளையாட வாய்ப்பில்லை – வெளியான தகவல்

அந்த வகையில் நாங்கள் 15 ஓவர்கள் சிறப்பாக பந்துவீசி உள்ளோம். ஆனால் கடைசி 5 ஓவர்களில் 80 ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது தான் இருந்தாலும் அதில் தவறு ஏதும் கிடையாது. இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது சிறப்பாக இருந்தது. பந்து நன்றாக பேட்டிற்கு வந்ததால் இந்திய வீரர்கள் ரன்களை குவித்து இறுதியில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது மகிழ்ச்சி என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement