இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் இருக்க விரைவாக முதலில் நாடு திரும்பிய ஹிட்மேன் – வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ

Rohit Sharma

இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் மீதும், கேப்டன் கோலியின் மீதும் விமர்சனங்கள் மெல்ல மெல்ல எழதுவங்கியுள்ளன.

 

View this post on Instagram

 

#rohitsharma takes the drivers seat as he heads back home #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

விமான டிக்கெட் தாமதம் காரணமாக இந்திய அணி இன்னும் நாடு திரும்பாதது குறிப்பிடத்தக்கது. 15 அல்லது 16 ஆம் தேதி இந்திய அணி நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெள்ளி இரவு இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்தியா (மும்பை) திரும்பியுள்ளார்.

இதற்கு யாதெனில் அடுத்து நடைபெறவுள்ள மே.இ தீவுகள் அணிக்கு எதிராக முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியை ரோஹித் வழிநடத்த உள்ளார். இதனால் தனது மனைவி மற்றும் குழுந்தையுடன் தனது வீட்டில் நேரத்தை செலவிட விரும்பிய ரோஹித் விரைவாக இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.