ராஜஸ்தான் அணிக்கெதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – ரோஹித் பெருமிதம்

rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 51 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்களை மட்டுமே குவித்தது.

mivsrr

- Advertisement -

அதிகபட்சமாக லீவிஸ் 24 ரன்களும், டேவிட் மில்லர் 15 ரன்களை மட்டுமே குவித்தனர். அதன் பின்னர் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது அதிரடியாக விளையாடி முன்கூட்டியே போட்டியை முடிந்தால் ரன்ரேட் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் துவக்கம் முதலே அதிரடி காண்பித்தது. அதன்படி 8.2 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மும்பை அணியை சேர்ந்த இளம்வீரரான இஷான் கிஷன் 25 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் என்ன செய்ய நினைத்தோமோ அதை சரியாக செய்து உள்ளோம். இந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்துள்ள இந்த இரண்டு புள்ளிகள் மிகவும் முக்கியமானவை.

ishan

ஒரு கட்டத்தில் நாங்கள் 90 ரன்களில் அவர்களை ஆல் அவுட் செய்த பிறகு இந்த போட்டியை சீக்கிரமாக முடிக்க நினைத்தோம். அதன்படி இந்த போட்டியில் நாங்கள் மிக இயல்பாக எங்களது பேட்டிங்கை வெளிப்படுத்தினோம். இஷான் கிஷன் இரண்டு போட்டிகளுக்கு பின்னர் வந்து தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய திறமை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். சிறிது நேரம் மைதானத்தில் நின்றால் நிச்சயம் அவர் இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் தான்.

mi 1

இந்த போட்டியில் நாங்கள் பந்து வீச ஆரம்பித்ததும் பந்துவீச்சாளர்கள் சரியான லைன் அன்ட் லென்ந்தில் பந்து வீசினார்கள். ராஜஸ்தான் அணியில் ஏகப்பட்ட அதிரடி வீரர்கள் இருந்தும் அவர்களை கட்டுக்குள் வைத்து சிறப்பாக பந்துவீசினார்கள். மொத்தத்தில் ராஜஸ்தான் அணியை இவ்வளவு எளிய இலக்கில் சுருட்ட எங்களது பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சே காரணம் அவர்களின் சிறப்பான பங்களிப்பினால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளோம் என ரோகித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement