சென்னையை விட்டு வந்ததும் நல்ல வழி கிடைச்சிடுச்சாம். வெற்றிக்கு பிறகு – ரோஹித் பேசியதை கவனிச்சீங்களா ?

rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 24வது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 171 ரன்களை குவித்தது.

sanju

- Advertisement -

அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 13 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாகப் டிகாக் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

இரண்டு போட்டிகளில் நாங்கள் பெற்ற தோல்விக்குப் பிறகு இந்த போட்டியில் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இப்போது எங்கள் வழியில் அனைத்தும் வந்துள்ளதாக நினைக்கிறேன். முதல் பந்தில் இருந்து நாங்கள் இறுதிவரை சிறப்பாகவே விளையாடினோம். இதுதான் எங்கள் அணிக்கு தேவைப்பட்டது. வீரர்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து சிறப்பாக விளையாடி உள்ளனர்.

dekock

டெல்லி வந்து விளையாடுவது எங்களுக்கு பாசிட்டிவாக உள்ளது. ஏனெனில் இந்த மைதானம் சென்னை மைதானம் போன்று கிடையாது. இந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட முடியும் பவுண்டரிகளும் அளவும் சின்னது என்பதனால் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். எங்களது அணியின் பந்து வீச்சாளர்களும் தங்களது வேலையை சிறப்பாக செய்து முடித்தனர். இறுதி ஓவர்களில் ரன்களை நாங்கள் அதிகளவு கொடுக்கவில்லை.

dekock 1

கடைசி 7 ஓவரில் 50 ரன்கள் வரை தான் கொடுத்தோம். இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் மைதானத்தின் தன்மையறிந்து சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார். இந்த போட்டியில் டிகாக் துவக்கத்திலிருந்து இறுதி வரை நின்று போட்டியை சிறப்பாக விளையாடி முடித்து கொடுத்தார். அதே போன்று க்ருனால் பாண்டியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று ரோஹித் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement