
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி நேற்று மாலை திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து சில நாட்களிலேயே பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் பதவி விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அவரது இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது இந்த முடிவினை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 வெற்றிகளை பெற்றவர்.
அது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை குவித்த அவர் மிகச் சிறந்த வீரர்களை கட்டமைத்து இந்திய அணியை கடந்த பல ஆண்டுகளாகவே நம்பர் ஒன் அணியாக மாற்றி வெற்றிகரமாக வழியமைத்தவர்.
இந்நிலையில் அவரது இந்தப் பதவி விலகல் குறித்து தற்போது பேசியுள்ள ரோகித் சர்மா கூறுகையில் : விராட் கோலியின் இந்த முடிவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவர் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 3 மாசத்துல முடிவுக்கு வந்த விராட் கோலியின் ராஜநடை – இதை கவனிச்சீங்களா? (இவருக்கா இப்படி?)
ஏற்கனவே இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சேர்த்து மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.