நான் அப்போ நல்லா விளையாடல. அதனாலதான் அந்த வெர்ல்டுகப் சேன்ஸ் மிஸ் ஆயிடுச்சி – ரோஹித் வெளிப்படை

Rohith
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ரோகித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 227 ஒருநாள் போட்டிகள் மற்றும் 111 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள ரோகித் சர்மா துவக்க வீரராக தனது கேரியரை மாற்றியதில் இருந்து உலகின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.

rohith 2007

- Advertisement -

தனது அதிரடியான பேட்டிங் மூலம் உலக அளவில் ரசிகர்களை வைத்திருக்கும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத சாதனையாக 3 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவத்திலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். இந்நிலையில் அவர் 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தனக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்து தற்போது இங்கிலாந்தில் வர்ணனையாளராக செயல்பட்டுவரும் தினேஷ் கார்த்திக் இடம் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இடம் பெறாதது குறித்து தினேஷ் கார்த்திக் கேட்ட கேள்விக்கு ரோஹித் பதிலளிக்கையில் கூறியதாவது : 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. ஆனாலும் அது கனவாகவே போனது. ஏனெனில் அந்த தொடருக்கு முன்னர் நான் சரியாக விளையாடவில்லை.

Rohith

மேலும் அந்த சமயங்களில் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் அவ்வளவாக பயன்படுத்தவில்லை என்ற காரணத்தினால் எனக்கு அந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பு பறிபோனது. ஆனால் அதன் பிறகே நான் என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி எந்த இடத்தில் முன்னேற்றம் தேவை என்பதை கணித்து என்னுடைய பலத்தை அதிகரித்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Rohith

மேலும் நான் ஒரு நல்ல வீரராக மாற அந்த இடைவெளி உதவியதாகவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்து மட்டுமின்றி 648 ரன்களையும் ரோகித் சர்மா குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement