INDvsSL முதல் டி20 : டாஸிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா – பேசியது என்ன?

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று லக்னோ மைதானத்தில் சில நிமிடங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்ததால் தற்போது இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

Rohith

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டி குறித்தும், இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் சேசிங் செய்யவே விருப்பப்படுகிறோம். ஏனெனில் இந்த மைதானம் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பது இன்னும் நமக்கு உறுதியாக தெரியாது. இருப்பினும் இந்த போட்டியில் முதலாவதாக நாம் பேட்டிங் செய்ய இருப்பதால் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். இந்த மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் நாம் விளையாடி உள்ளதால் மைதானம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.

Rohith

இருப்பினும் இந்த மைதானத்தில் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை முன்பு வெளிப்படுத்தி உள்ளதால் அதை நிச்சயம் தொடர்வோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒரு அணியாக நமது அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவை அனைத்தும் சரியாகவே நடந்து வருகிறது. இந்திய அணியின் வீரர்கள் அனைத்து துறைகளிலும் சரியான செயல்பாட்டை கிளிக் செய்ய வேண்டியது அவசியம்.

- Advertisement -

புதிதாக அணியில் இணைந்திருக்கும் வீரர்களுக்கு இந்த தொடர் சவாலானதாக இருக்கும். கடைசியாக நாம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடிய அணியிலிருந்து இன்றைய போட்டியில் 6 மாற்றங்கள் (ஜடேஜா, சாம்சன், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல், தீபக் ஹூடா) உள்ளன என்றும் ரோகித் சர்மா கூறினார். அதன்படி ஏற்கனவே கடந்த தொடரின் போது காயம் காரணமாக கே.எல் ராகுல், அக்சர் பட்டேல் மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணாமாக வெளியேறி இருந்தனர்.

இதையும் படிங்க : INDvsSL முதல் டி20 : இந்திய அணியில் 6 மாற்றங்களை செய்துள்ள கேப்டன் ரோஹித் – பிளேயிங் லெவன் இதோ

அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த தொடருக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறினர். அது மட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓய்வு தேவைப்படுவதால் பயோ பபுளில் இருந்து வெளியேறியதால் இன்றைய போட்டியில் இந்திய அணி ஏகப்பட்ட மாற்றங்களுடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement