நாங்க நெனச்சா கண்டிப்பா பண்ணுவோம். 2ஆவது போட்டியின் டாஸிற்கு பிறகு – ரோஹித் பேசியது என்ன?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லக்னோ நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

INDvsSL

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டி20 போட்டி இன்று தர்மசாலா நகரில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணியுடன் விளையாடுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.

அதன்படி சற்று முன்னர் நடைபெற்று முடிந்த பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகின்றது.

Ishan-Kishan-Keeper

இந்நிலையில் டாசிற்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். ஏனெனில் எங்களுக்கு முன்னால் வைக்கப்படும் இலக்கை எதிர்த்து நாங்கள் விளையாட ஆசைப்படுகிறோம். எப்போதுமே இந்திய அணி சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த போட்டியில் நாங்கள் முதல் போட்டியில் விளையாடிய அதே அணியுடன் தான் விளையாடுகிறோம். வெற்றி அடைந்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ அணியை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அணிக்கு எது தேவையோ அதைத்தான் செய்ய வேண்டும். அதனால் மாற்றம் என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடைத்தை நிரப்ப இவர்தான் சரியான ஆள் – சஞ்சய் பாங்கர் கருத்து

நாங்கள் அணிக்கு தேவை என்று எப்போது நினைக்கிறோமோ அப்போது அந்த மாற்றத்தை செய்வோம். வீரர்களுக்கு காயங்கள், தசைப்பிடிப்பு போன்றவை தற்செயலாக ஏற்படுகின்றன. அதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறோம் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement