இந்த 13 ஆண்டுகள் கனவாக இருக்கிறது. நேற்று என் வாழ்வின் முக்கியமான நாள் – ரோஹித் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி வீரரான ரோகித் சர்மா இந்திய அணிக்காக அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்தது. முதன் முறையாக 2007 ஆம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி இந்திய அணியில் அறிமுகமான ரோகித் சர்மா அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

Rohith-3

- Advertisement -

அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் நெருக்கடியான நேரத்தில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ரோகித் சர்மா தோனியின் மூலம் துவக்க வீரராக களமிறங்கி அதன்பிறகு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் துவக்க வீரராக களமிறங்கி அதைத் தொடர்ந்து அவர் நிகழ்த்தி வரும் சாதனைகளுக்கு அளவில்லை என்றே கூறலாம்.

Rohith

அந்த அளவுக்கு தனது அபாரமான பேட்டிங் வேட்டையின் மூலம் சாதனைகளை படைத்து வரும் இவர் கோலிக்கு நிகராக இந்திய அணியில் பார்க்கப்படுகிறார். அதுமட்டுமின்றி தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மா தனது 13 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

“மிகவும் அருமையான 13 ஆண்டுகள் மேலும் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக உள்ளன”. சாதாரணமாக விளையாடி வந்த நான் தற்போது இந்த அளவுக்கு உயருவேன் என நினைக்கவில்லை எனது கனவு நனவாகி விட்டது. என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rohith

ரோகித் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 224 ஒருநாள் போட்டிகளிலும், 108 t20 மற்றும் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து கிட்டத்தட்ட 14 ஆயிரம் ரன்களை அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 3 இரட்டை சதங்கள், t20 அரங்கில் 4 சதங்கள் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement