வெ.இ தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பும் ரோஹித் சர்மா – வெளியேற்றப்பட இருக்கும் வீரர்கள் இதோ

Rohith
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக பங்கேற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்தது. இதையடுத்து வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ள இந்தியா வரும் பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் துவங்க உள்ள இந்த சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அகமதாபாத் நகரிலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது.

Rohith

- Advertisement -

திரும்பும் ஹிட்மேன்:
இந்த கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் புதிய முழுநேர ஒருநாள் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா திரும்ப உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. ஏனெனில் கடந்த மாதம் விராட் கோலி நீக்கப்பட்டு புதிய ஒருநாள் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கு முன் காயமடைந்தார்.

அதன்பின் நடந்த தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் அவர் இல்லாத காரணத்தால் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் படு தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் காயத்திலிருந்து குணமடைய அவர் கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் காயத்திலிருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் திரும்ப உள்ளார்.

Bhuvi-1

நீக்கப்படும் சீனியர்கள்:
இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதில் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் மோசமாக செயல்பட்ட வீரர்கள் நீக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிய தமிழகத்தின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் இடம் கேள்வி குறியாகியுள்ளது. இருப்பினும் அஸ்வினுக்கு இந்த தொடரில் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bumrah

பும்ராவுக்கு ஓய்வு :
அத்துடன் இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது. அதே சமயம் டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்சல் படேல், அவேஷ் கான் போன்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

- Advertisement -

திரும்பும் ஜடேஜா – பாண்டியா :
ரோஹித் சர்மா போல தென்ஆப்பிரிக்க தொடருக்கு முன் காயமடைந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அதிலிருந்து ஓரளவு குணமடைந்துள்ளார். எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணிக்கு அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் கூட வரும் மார்ச் மாதம் நடைபெறும் இலங்கை தொடரில் அவர் இந்திய அணியில் நிச்சயம் திரும்ப உள்ளார்.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் வேணாம். இவரை ஆர்.சி.பி அணிக்கு கேப்டனா போடுங்க – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

2021 டி20 உலகக்கோப்பையில் பந்துவீசாததன் காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தற்போது வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார். எனவே அவரும் இந்த தொடர் அல்லது வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் எனவும் தெரிய வந்திருக்கிறது.

Advertisement