ஷ்ரேயாஸ் ஐயர் வேணாம். இவரை ஆர்.சி.பி அணிக்கு கேப்டனா போடுங்க – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

Chopra
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரணமாக வழக்கமான மினி ஏலத்துக்கு பதில் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1214 வீரர்கள் போட்டி போட உள்ளதால் இந்த ஏலத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

RCB

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமத் சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. ஆனாலும் அந்த அணியின் கேப்டனாக இருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த சீசனுடன் அந்த பதவியில் இருந்து விலகினார்.

கடந்த 2013 முதல் அந்த அணியின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி தம்மால் முடிந்த அளவுக்கு மலை போல ரன்களை குவித்து கேப்டன்ஷிப் செய்த போதிலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த அவர் இந்தியாவின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய கையோடு பெங்களூர் அணி கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

RCB

அடுத்த கேப்டன் யார்:
இந்நிலையில் ஐபிஎல் 2022 சீசனில் பெங்களூருவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி அந்த அணி ரசிகர்கள் இடையே நிலவி வருகிறது. இந்த வேளையில் டெல்லி அணிக்காக கடந்த 2019, 2020 சீசன்களில் மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை மெகா ஏலத்தில் எடுத்து தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்க பெங்களூர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

- Advertisement -

இந்நிலையில் பெங்களூர் அணியின் கையிலேயே கிளென் மேக்ஸ்வெல் இருப்பதாக இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Maxwell

கிளென் மேக்ஸ்வெல்:
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர், “அவர்கள் மேக்ஸ்வெலை ஏன் கேப்டனாக கருதக்கூடாது. கடந்த வருடம் அவர் அந்த அணிக்காக மிக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவர் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்குமா? அது மிகவும் கடினமான வாய்ப்பாகும். எனவே நான் அந்த வழியில் செல்ல மாட்டேன். ஷ்ரேயஸ் ஐயரும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அவரை கேப்டனாக நியமிக்க பெங்களூரு நினைக்கலாம் ஆனால் அவர் எனது முதல் தர தேர்வாக இருக்க மாட்டார்.

- Advertisement -

ஏனெனில் பெங்களூரு சின்னசாமி மைதானம் அப்படியாகும். அத்துடன் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய கூடியவராக இருக்கும் அவர் விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு அணியில் விளையாட செட்டாவது கடினமாகும்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல அதிரடி வீரராக இருக்கும் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரில் ஒரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Holder 1

மேக்ஸ்வெல் – ஹோல்டர்:
“ஒன்று மேக்ஸ்வெல் பற்றி நினைக்க வேண்டும் அல்லது நான் இங்கு ஒரு பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன், அவர்தான் ஜேசன் ஹொல்டர். அவர் பெங்களூர் அணியில் விளையாட தேவையான குணங்களை கொண்டவராக உள்ளார். ஒரு அணியை எப்படி வழி நடத்த வேண்டும் என தெரிவித்துள்ள அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட கூடியவர்”

இதையும் படிங்க : ப்ளீஸ் இவரை மட்டும் இந்திய அணிக்கு கேப்டனா போடாதீங்க. செட்டே ஆகாது – கெஞ்சிய ஷேன் வார்ன்

என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா பெங்களூர் அணியின் கேப்டனாக கிளன் மேக்ஸ்வெல் அல்லது ஜேசன் ஹோல்டர் ஆகியோரை தேர்வு செய்யலாம் ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் தகுதியானவராக இருக்க மாட்டார் என தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதில் மேக்ஸ்வெலை விட ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் ஏகப்பட்ட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement