- Advertisement -
இந்திய கிரிக்கெட்

INDvsWI : என்னால காத்திருக்க முடியல. முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னர் – ரோஹித் வெளியிட்ட புகைப்படம்

தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இழந்த நிலையில் தற்போது தோல்வி பெற்ற வருத்தத்துடன் நாடு திரும்பியுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியை ரோகித் சர்மா தலைமையில் ஏற்கனவே பிசிசிஐ அறிவித்து விட்டது. இந்த தொடரில் இருந்து முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். டி20 போட்டிகள் அனைத்தும் கொல்கத்தாவிலும், ஒருநாள் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அகமதாபாத் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படமானது “ஆரம்பிக்கலங்களா.. காத்திருக்க முடியவில்லை என்ற கேப்ஷன் இல் பதிவிடப்பட்டுள்ளது. அவர் பகிர்ந்த இந்த புகைப்படமானது பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : என் ரோல் மாடல் தல தோனியை போல் சிறந்த பினிஷராக வருவேன் – தமிழகத்தின் இளம் வீரர் நம்பிக்கை

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் நகரில் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by