என் ரோல் மாடல் தல தோனியை போல் சிறந்த பினிஷராக வருவேன் – தமிழகத்தின் இளம் வீரர் நம்பிக்கை

tn
- Advertisement -

ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலத்தை வெற்றிகரமாக நடத்த தேவையான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கு பெற உள்ளார்கள். இந்த மெகா ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக கருதப்படும் இளம் வீரர் ஷாருக்கான் மிகவும் குறைந்தபட்ச அடிப்படை விலை தொகையான 20 லட்சத்துக்கு தனது பெயரை விண்ணப்பம் செய்துள்ளார்.

IPL

- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் இவர் மிகவும் குறைந்தபட்ச விலைக்கு இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாட்டுக்காக அபாரமாக செயல்பட்ட இவரை கடந்த 2021 ஐபிஎல் சீசனில் 5.25 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது.

தரமான ஷாருக்கான்:
கடந்த வருடம் நடந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றார். குறிப்பாக கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களைக் குவிப்பதில் இவர் வல்லவராக திகழ்கிறார்.

sharukh 1

அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் பிரபல உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பையில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த இவர் கர்நாடகாவுக்கு எதிரான மாபெரும் இறுதி போட்டியில் வெறும் 15 பந்துகளில் 33* ரன்கள் விளாசி தமிழகத்தை வெற்றி பெறச் செய்தார். குறிப்பாக வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது மெகா சிக்ஸர் பறக்க விட்ட சாருக்கான் தமிழகத்திற்கு சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்தார்.

- Advertisement -

வருங்கால பினிஷெர் :
அதன்பின் நடந்த விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரிலும் கலக்கிய ஷாருக்கான் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து தமிழகத்தின் வெற்றிகளில் பங்காற்றினார். இவரின் அபார திறமையை பார்த்த தமிழக ரசிகர்கள் இவரை “தமிழ்நாட்டின் புதிய பினிசெர்” என சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

sharukh

இவரின் திறமையைப் பார்த்த இந்திய தேர்வுக்குழு விரைவில் துவங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக அறிவித்துள்ளது. மேலும் விரைவில் இவர் இந்திய முதன்மை அணியிலும் இடம் பிடித்து விளையாட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளது பற்றி ஷாருக்கான் மனம் திறந்து பேசியுள்ளது பின்வருமாறு. “எனது வழி இப்போது தெளிவாகி விட்டது. தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் இந்தியாவுக்காக விளையாட நீங்கள் ரெடியா என நீங்கள் என்னை கேட்டிருந்தால் அப்போது இல்லை என தெரிவித்து இருப்பேன். ஆனால் இந்தியாவுக்காக விளையாட தற்போது நான் தயாராக உள்ளேன். இந்திய அணியில் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

sharukh

களத்தில் நான் இறங்கும் போது பிரஷர் பற்றி நினைக்காமல் அமைதியாக விளையாட மனதளவில் தயாராக செல்வேன். எனது அணிக்காக சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி கியரை மாற்ற வேண்டும் என எனக்கு தெரியும். எப்போதுமே அணிக்காக அல்லாமல் உங்களுக்காக விளையாடினால் மட்டுமே உங்களின் முகத்தில் பிரஷர் காணப்படும். எனவே எப்போதும் என்னை பற்றி நினைக்காமல் எனது அணியை முன்னிலைப்படுத்தி விளையாடுவேன். அதன் காரணமாக எனக்கு பிரஷர் கிடையாது” என கூறியுள்ளார்.

- Advertisement -

தோனி போல:
“எம்எஸ் தோனியை ரோல் மாடலாக கொண்டுள்ள நான் இந்தியாவுக்காக அவர் பினிஷிங் செய்தது போலவே நான் விளையாடும் போட்டிகளை ஃபினிஷிங் செய்ய விரும்புகிறேன். நான் எப்போதும் தோனியை பார்த்து அவரை போல ஒரு சிறந்த பினிஷெராக விரும்புகிறேன்” என கூறியுள்ள சாருக்கான் இந்தியாவின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி தமக்கு ரோல்மாடல் எனவும் அவரை போலவே வருங்காலங்களில் இந்தியாவின் பினிஷெராக விளையாட முயற்சிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய தரமான இந்திய அண்டர் 19 வீரர்கள் – 4 பேர் லிஸ்ட் இதோ

கடந்த ஐபிஎல் 2021 தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியின் முடிவில் சென்னை கேப்டன் எம்எஸ் தோனி பஞ்சாப் அணியில் விளையாடிய ஷாருக்கானுக்கு ஆலோசனைகள் வழங்கிய புகைப்படங்கள் அப்போது வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மெகா ஏலம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏலத்தைப் பற்றி நான் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை. தற்போது நடப்பதை விரும்புகிறேன். எனக்கு எந்தவிதமான வாய்ப்பு வந்தாலும் அதை இருக்கமாக பிடிக்க உள்ளேன்.

அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிறைய கற்றுக் கொண்டேன். குறிப்பாக கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் திடீரென அவுட் ஆனபோது கடைசி நேரத்தில் நான் பினிஷிங் செய்து வெற்றி பெற செய்தது மறக்கவே முடியாது” என கூறியுள்ளார். விரைவில் நடைபெறும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் நிச்சயம் 5 கோடிகளுக்கும் மேல் சாருக்கான் விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement