ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய தரமான இந்திய அண்டர் 19 வீரர்கள் – 4 பேர் லிஸ்ட் இதோ

IND-u-19
- Advertisement -

ஐபிஎல் 2022 சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு நகரில் நடைபெற உள்ளது. இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மெகா அளவில் 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த ஏலம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி முற்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளதால் அவர்களை வாங்க 10 அணிகளும் பல கோடி ரூபாய்களுடன் தயாராக உள்ளன.

Under 19 World Cup

- Advertisement -

இந்த தொடரில் ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களும் அமெரிக்கா, நேபாள் உள்ளிட்ட ஒரு சில சிறிய நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க அண்டர் 19 இந்திய அணிக்காக விளையாடும் இளம் இந்திய வீரர்களும் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

தரமான அண்டர் 19 காளைகள்:
தற்போது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக இந்த உலக கோப்பை நடைபெற்று வருவதால் இதில் கலக்கும் சில இந்திய வீரர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய டாப் இளம் அண்டர் 19 வீரர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

Yash Dhull

1. யாஷ் துள் : ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரில் இந்தியாவின் கேப்டனாக டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் யாஷ் துள் தலைமையேற்று நடத்தி வருகிறார். இளம் ஆல்-ரவுண்டராக இருக்கும் இவர் இந்த உலக கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 82 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த முக்கியமான காலிறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா மளமளவென விக்கெட்டுகளை இழந்த போது 20* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். ஏற்கனவே கேப்டன்ஷிப் அனுபவம் உள்ள இவரை ஏலத்தில் வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

2. ராஜ் பாவா : வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர் ராஜ் பாவா இந்த உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்த உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் உகாண்டாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 108 பந்துகளில் 162 ரன்கள் விளாசி அசத்தினார்.

Raj Bawa

இந்த 162 ரன்கள் வாயிலாக ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இப்படி ஆல்-ரவுண்டராக அசத்தி வரும் இவர் அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதால் வரும் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போவார் என நம்பலாம்.

3. விக்கி ஒஸ்த்வால்: இந்திய அண்டர் 19 அணியில் சுழல் பந்து வீச்சாளராக விளையாடி வரும் விக்கி ஒஸ்த்வால் இதுவரை 9 விக்கெட்களை சாய்த்து ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராக முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரின் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இவரையும் வாங்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

ipl trophy

4. ஹர்னூர் சிங் : இந்திய அண்டர் 19 அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் ஹர்னூர் சிங் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக காணப்படுகிறார். இந்த உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் விளாசிய அவர் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். மேலும் கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய அண்டர் 19 கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடர் முழுவதும் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய இவர் அந்த தொடரின் தொடர் நாயகன் விருதை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். எனவே இவரையும் ஏலத்தில் வாங்க ஐபிஎல் அணிகள் கண்டிப்பாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement