தொடை முழுவதும் சிவந்து போயி படுத்து கிடக்கும் ரோஹித் – செஞ்சுருக்கு பின்னால் உள்ள வலி

Rohith-5
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸ் நேற்று மூன்றாம் நாளாக ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியானது ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் நல்ல தொடக்கத்தை பெற்றது. முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற பின்னர் புஜாரா மற்றும் ரோஹித் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர்.

rohith 2

- Advertisement -

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 2 ஆவது விக்கெட்டிற்கு 153 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் 127 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 204 பந்துகளில் சதத்தை கடந்த ரோஹித் இறுதியில் 256 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 127 ரன்கள் அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்று ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவர் ஆட்டமிழந்த போது இந்திய அணி 236 ரன்கள் எடுத்திருந்தது. பிறகு 61 ரன்கள் எடுத்த நிலையில் புஜாராவும் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணியை விட 171 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. மேலும் நான்காம் நாளான இன்று இந்திய அணி மேலும் 150 ரன்களை சேர்க்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

rohith 6

இந்த போட்டியில் இந்திய அணி முன்னிலை பெற முக்கிய காரணமாக ரோகித் சர்மாவின் இந்த சதம் அமைந்தது. ரோகித்தின் இந்த சிறப்பான இன்னிங்சிற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் அதே வேளையில் அதற்கு பின்னால் உள்ள வலிகளை எல்லாம் விவரிக்கும் விதமாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி ரோகித் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் பலமுறை தொடை பகுதியில் காயம் அடைந்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள அந்த புகைப்படத்தில் தொடை முழுவதும் சிவந்து போய் உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement