
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் தோற்று இருந்தாலும், டி20 தொடரை 2 க்கு 1 என அசத்தலாக கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். மேலும் அந்த வெற்றியைப் பெற்ற உற்சாகத்தோடு தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டியில் 17 ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் கோலி நாடு திரும்புவதால் இந்த தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமையும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இந்திய அணி கடந்த முறை கைப்பற்றிய டெஸ்ட் தொடரை இந்த முறையும் தக்கவைத்துக்கொள்ள மும்முரம் காட்டும் என்று தெரிகிறது. மேலும் கோலி அணியில் இல்லாத நிலையில் ரோகித் டெஸ்ட் அணிக்கு திரும்பினால் அணியை பலப்படுத்தும் என்று ரசிகர்கள் ஏற்கனவே கூறிவந்தனர்.
ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் சேர்க்கப்படாத ரோஹித் நாடு திரும்பி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தற்போது பெங்களூருவில் தேசிய அகாடமி சார்பில் இன்று அவருக்கு உடற்தகுதி சோதனை நடைபெறும் என்று என்று பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி நடைபெறும் இந்த உடல் தகுதி தேர்வில் ரோகித் சர்மா வெற்றி பெறும் பட்சத்தில் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அவரை அனுப்பி வைப்பது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும். இந்த டெஸ்டில் அவர் தோற்றால் நிச்சயம் அவர் ஆஸ்திரேலியா செல்ல மாட்டார் மேலும் இன்று ரிசல்ட் வெளியாகி உடனேயே அவர் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்தால் தான் இரண்டாவது போட்டியில் இருந்து அவரால் அணியில் இணைய முடியும் இல்லை என்றால் இந்த டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா இணைவது சாத்தியம் இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர் இஷாந்த் சர்மா இடம்பெறவில்லை அதுமட்டுமின்றி டி20 போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்க ரோஹித் சர்மா குறித்த முக்கிய உடற்தகுதி சோதனை இன்று நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் அந்த ரிசல்டிற்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.