நேற்றைய போட்டியின் 2 சிக்ஸர் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

rohith-1
- Advertisement -

மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 22 ரன்கள் குவித்தார். அவர் அடித்த இந்த இரண்டு சிக்ஸர்கள் மூலம் நேற்று ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அதன்படி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

mivsrr

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 90 ரன்களை மட்டுமே குவிக்க அதனை தொடர்ந்து 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 8.2 ஓவர்களில் 94 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்னர் வரை ரோகித்சர்மா சர்வதேச டி20 போட்டி மற்றும் ஐபிஎல் போட்டிகள் என இரண்டிலும் சேர்த்து 398 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித் அடித்த 2 சிக்சர்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்சரை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை ரோகித் சர்மா 212 போட்டிகளில் விளையாடிய 227 சிக்சர்களை அடித்து உள்ளார்.

rohith

இந்த பட்டியலில் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிக அடித்த வீரராக கெயில் 357 சிக்சர்களுடன் முதலாவது இடத்திலும், டிவில்லியர்ஸ் 249 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், ரோகித் சர்மா 227 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 1042 சிக்சர்களுடன் கெயில் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பொல்லார்டு கூறிய வார்த்தைகள் தான் நான் மீண்டும் சிறப்பாக விளையாட காரணம் – இஷான் கிஷன் ஹேப்பி

அவரை தொடர்ந்து பொல்லார்டு 758 சிக்ஸர்கள், ரசல் 510 சிக்ஸர்கள் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை முதல் நபராக ரோகித் தற்போது 400 சிக்ஸர்களை விளாசி உள்ளார். அவரை தொடர்ந்து ரெய்னா 336 சிக்ஸர்களும், கேப்டன் கோலி 316 சிக்ஸர்களும், தோனி 304 சிக்சர்களும் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement