பொல்லார்டு கூறிய வார்த்தைகள் தான் நான் மீண்டும் சிறப்பாக விளையாட காரணம் – இஷான் கிஷன் ஹேப்பி

Ishan-1
- Advertisement -

மும்பை அணியின் இளம் அதிரடி வீரரான இஷான் கிஷன் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கும் தேர்வாகி விளையாடிய அவர் தொடர்ந்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பட்டியலிலும் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷன் கிஷன் கடந்த இரு போட்டிகளாக மும்பை அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

Ishan kishan

- Advertisement -

இதனால் அவரது மோசமான பார்ம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய அணி நிர்வாகத்திற்கும் கவலை அளித்தது. இந்நிலையில் நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கி 25 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரி என 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மோசமான பார்ம்மில் இருந்து தற்போது மீண்டும் இஷான் கிஷன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மும்பை அணிக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் மகிழ்ச்சியான விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் உலக கோப்பை தொடருக்கு முன்பாக மனரீதியாக வீரர்களின் நலம் என்பது முக்கியம் அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அவருக்கு நல்ல தன்னம்பிக்கை அளிக்கும். நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய மும்பை அணியானது பிளேஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை தக்க வைக்க நல்ல ரேட்டுடன் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

ishan

இதன் காரணமாக துவக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை வீரர்கள் 8.2 ஓவர்களில் 94 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் 25 பந்துகளில் 50 ரன்கள் குவித்த இஷான் கிஷன் போட்டிக்குப் பின்னர் தனது இந்த பேட்டிங் பற்றி கூறுகையில் : மீண்டும் நான் அணியில் ஓபனிங் இறங்கி ரன்களைக் குவித்து வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டியில் என்னுடைய செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கிறது. நிச்சயம் எங்கள் அணி தற்போது நல்ல இடத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

ishan 2

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு ஏற்ற இறக்கம் வரும் அந்த வகையில் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட எங்களது பல பேட்ஸ்மேன்கள் இம்முறை ரன்களை குவிக்க முடியவில்லை இருந்தாலும் எங்களது அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ஆகியோர் எங்களை ஆதரித்தனர். என்னுடைய பேட்டிங் பார்ம் மோசமான போது நான் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் பேசினேன், அனைவரும் எனக்கு ஆதரவு அளித்தனர்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணிக்கெதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – ரோஹித் பெருமிதம்

அதுமட்டுமின்றி பொல்லார்டு என்னிடம் வந்து “நீ எப்பொழுதுமே சாதாரணமாக இரு”, நிச்சயம் உன் வழியில் நீ பேட்டிங் செய்வாய்” உன்னுடைய பழைய பேட்டிங் வீடியோக்களை பார் அதில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறாய் என்பதை பார்த்தால் உனக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும் என்று கூறினார். அவர் கூறியது படியே நான் என்னுடைய ஆட்டத்தின் சில வீடியோக்களை பார்த்தேன். அதன் பின்னர் இன்றைய போட்டியிலும் அவ்வாறு விளையாட வேண்டும் என்று நினைத்து சிறப்பாக விளையாடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement