சுத்த சைவம். தெலுங்கு தெரிந்தவர். பீட்டா உறுப்பினர் – ரோஹித் குறித்த பல சுவாரசிய தகவல்கள் இதோ

Rohith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துவக்க வீரரான ரோகித் சர்மா நேற்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது ரோஹித் சர்மா வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரோஹித் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரை 32 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 224 ஒருநாள் போட்டிகள் மற்றும் 108 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம் அடித்த வீரர் என்ற அசைக்க முடியாத சாதனையும் தன்வசம் வைத்துள்ளார்.

ரோகித் சர்மாவின் கிரிக்கெட் சாதனைகளை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை தவிர ஹிட்மேன் குறித்த பல கூடுதல் தகவலை அவரது பிறந்தநாளான நேற்று பல தகவல்கள் வெளியாகின. அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். அதில் முக்கியமானவை :

Rohith

1) ரோஹித்தின் தாய் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சற்று தெலுங்கு தெரியும்

- Advertisement -

2) ஒருமுறை விரேந்திர சேவாக் கை பார்ப்பதற்காக பள்ளிக்கு கட் அடித்துவிட்டு அவரை பார்க்க சென்றுள்ளார்.

3) ரோஹித் ஒரு சைவ பிரியர் அதனால் அவர் நண்பர் வைத்த போட்டியில் 45 முட்டைகளை சாப்பிட்டுள்ளார்.

- Advertisement -

4) ரோஹித் ஞாபகமறதி காரர் ஹோட்டல் விமானங்களில் அடிக்கடி தனது பொருளை மறந்து வைத்து விடும் பழக்கம் உடையவர்.

5) ஒருமுறை தன் திருமண மோதிரத்தை ஹோட்டலில் மறந்து சென்றுவிட்டார்.

- Advertisement -

6) ஆறு ஆண்டுகள் காதலித்த தனது காதலியை ரித்திகாவை 2015 டிசம்பர் 13 திருமணம் செய்தார்.

7) ரித்திகா ஒரு விளையாட்டு துறை மேனேஜர் ரோகித் சர்மாவும் அவரது வாடிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

8) ரோஹித் ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் ரசிகர் ஆவார்.

9) ரோஹித்தின் ஜெர்சி எண் 45

10) ரெய்னாவுக்கு அடுத்து இரண்டாவது வீரராக மூன்று வகை கிரிக்கெட்டிலும் சதங்களை விளாசியுள்ளார்.

11) ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் விளாசியவர் மற்றும் பவுண்டரிகள் மூலம் அதிக ரன்கள் அடித்தவர் மேலும் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

12) பெர்த் நகரில் சதமடித்த முதல் இந்தியர் இவர் தான்.

13) டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக அறிமுகமான போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 3 ஆவது வீரர்.

14) 2015ஆம் ஆண்டு ரோஹித்துக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

15) ஐபிஎல் போட்டிகளில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்.

16) இந்தியாவிற்காக டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்.

17) அவர் 2017 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் கேப்டனாக இருந்து ஒரு நாள் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றி கொடுத்தவர் ரோகித்.

18) பீட்டா அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

Advertisement