என்னுடை வேண்டுகோள் இது ஒன்றுதான். ப்ளீஸ் எல்லோரும் நான் சொல்றத கேளுங்க – ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ரோஹித்

Rohith
- Advertisement -

கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழலில் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் மதிப்பு கொடுத்து மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Rohith

- Advertisement -

இந்நிலையில் இன்று மருத்துவர் தினத்தை நாடு முழுவதும் இந்தியா கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அனைவரும் மருத்துவர்களையும், அவர்களை சார்ந்த ஊழியர்களையும் கவரும் வகையில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த டாக்டர் தினத்தை முன்னிட்டு உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது : “இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரியும் மருத்துவர்களின் தியாகத்தையும், துணிவையும் நாங்கள் அறிவோம்” அவர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். மக்களிடம் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். தயவுசெய்து அரசு அறிவுறுத்தி உள்ளபடி கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து மருத்துவர்களின் பணியை எளிமையாக்குங்கள் கேளுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும் போது : “எங்களுடைய உண்மையான கதாநாயகர்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சமுதாயத்திற்கான சேவையை அர்ப்பணிப்போடு செய்து வருகிறார்கள். உங்களுக்கு எனது நன்றிகள் நீங்கள் மக்களுக்காக கரிசனையோடு எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம்.

நீங்கள் தன்னலமற்ற தன்மை, இரக்கம், அன்பு ஆகியவற்றின் உருவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் பலரும் இவர்களை தொடர்ந்து டாக்டர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement