சச்சின், தோனி, கோலி ஆகியோரோடு இணைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு வேற எதுவும் வேணாம் – ரோஹித் பூரிப்பு

Rohith

வருடாவருடம் விளையாட்டுத்துறையின் சார்பாக தங்களது துறையில் நன்றாக செயல்படுபவர்களுக்கு இந்திய அரசாங்கம் விளையாட்டுத் துறை சம்பந்தமான விருதுகளை கொடுப்பது வழக்கம். சென்ற வருடம் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த வருடம் கரோனா வைரஸ் தொற்று காரணமாக டெலி கான்பிரன்ஸ் மூலம் அனைவரும் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

IND-1

இந்த இடத்தில் கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவிற்கு அர்ஜுனா விருதும், ரோகித் சர்மாவிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. விளையாட்டுத்துறையில் கொடுக்கப்படும் உயரிய விருது இந்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதாகும். இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற ரோகித்சர்மா மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள மட்டுமல்லாமல் ஜாம்பவான்கள் கொண்ட இந்த பட்டியலில் தானும் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில்…

கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். என்னை தேர்வு செய்த விளையாட்டு துறை அமைச்சகத்திற்கு எனது மிகப்பெரிய நன்றிகள். சச்சின், தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் உள்ள இந்த பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இணைவதால் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Rohith

மேலும், நாட்டுக்காக நாம் விளையாடும் போது அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் அங்கீகாரம் நம்மை மேலும் ஊக்கப்படுத்தும். ஒரு விளையாட்டு வீரருக்கு இதுதான் தேவை. இதனை வைத்து நாட்டுக்காக இன்னும் சிறப்பாக விளையாடுவேன். மேலும், பல வெற்றிகளை பெற்றுத் தருவேன் என்று தெரிவித்துள்ளார் ரோகித் சர்மா.

- Advertisement -

Rohith

முன்னதாக விளையாட்டு துறையை சேர்ந்த சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே விருது மகேந்திர சிங் தோனிக்கு வழங்கவேண்டும் என்று பல ரசிகர்களும், விமர்சகர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.