மும்பை அணியில் இவரது இடத்தை நிரப்புவது கஷ்டம். இவர் ஒரு மேட்ச் வின்னர் – ரோஹித் நெகிழ்ச்சி

Rohith-1
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து வருடங்களுக்கு மேலாக விளையாடியவர் லசித் மலிங்கா. அந்த அணிக்காக மட்டுமல்லாது ஐபிஎல் தொடரின் முதல் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படுகிறார். தனது துவக்க காலத்திலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டு, ஐபிஎல் போன்ற பெரிய லீக் தொடர்களில் மட்டும் ஆடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இனிமேல் உரிமையாளர்கள் இருக்கும் டி20 லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார் லசித் மலிங்கா. இந்நிலையில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கண்டிப்பாக மிஸ் செய்யும் என்று அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோகித் சர்மா பதிவு செய்தது….

- Advertisement -

லசித் மலிங்காவை எங்களது அணி கண்டிப்பாக மிஸ் செய்யும். அவருடன் பல போட்டிகளில் ஆடி இருக்கிறேன். ஒற்றை ஆளாக அணியை வெற்றிபெற வைப்பதில் கில்லாடி. அவர் அணியில் இல்லாததை நாங்கள் மிஸ் செய்வோம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்‌ ரோஹித் சர்மா. இலங்கையைச் சேர்ந்தவரான லசித் மலிங்காவுக்கு தற்போது 37 வயதாகிறது.

தற்போது வரை 122 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 170 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளில் தன்னந்தனியாக நின்று வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் லசித் மலிங்கா. சென்ற வருடமே கொரோனா வைரஸ் இருப்பதன் காரணமாக தனது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளாமல் மலிங்கா விலகியது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தற்போது இந்தாண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தாலும் நிச்சயம் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றிற்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராக மாறுவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement