கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.
இதனால் வீட்டிற்குள்ளேயே கிரிக்கெட் வீரர் தொடங்கியுள்ளதால் அவர்கள் ரசிகர் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்குள் இருந்தாலும் உடல் தகுதியை சரியாக வைத்திருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் : வீட்டிற்குள்ளேயே இருங்கள், ‘வீட்டிற்குள் இருப்பது ஒரு விதிவிலக்கு அல்ல’ உடல் தகுதியுடன் இருங்கள்,’ பத்திரமாக இருங்கள். என்று பதிவு செய்துள்ளார்.
ஏற்கனேவே தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பை போலீசார் பாதுகாப்பு பணியில் ரோந்து செல்லும் வீடியோ ஒன்றினை பகிர்ந்த ரோஹித் காவல்துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்தது மட்டுமின்றி மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படியும் வீட்டை விட்டு வெளியே தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்றும் உருக்கமாக கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் அற்புதமாக ஆடிய ரோகித் சர்மா 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் 5 சதம் விளாசினார். அதனை தாண்டி டெஸ்ட் அணியில் துவக்க வீரராக களமிறங்கி சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது காயம் அடைந்து தற்போது வரை கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.