Mumbai Indians : தோனி மற்றும் ஜாதவ்க்கு எதிராக நான் பயன்படுத்திய திட்டம் பலித்து வெற்றி கிடைத்தது – ரோஹித்

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.

Dhoni

- Advertisement -

பிறகு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை கண்டது. ராயுடு மற்றும் வாட்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், பின்னால் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியில் வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா : இந்த போட்டியில் துவக்கத்தில் சென்னை அணி விக்கெட்டினை இழந்தபோதிலும் தோனி மற்றும் ஜாதவ் தேவையான இலக்கினை அடிக்க கூடியவர்கள் என்று நினைத்தேன். மேலும், இவர்கள் இருவரும் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்வார்கள். எனவே அவர்களுக்கு எதிராக தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களை பந்துவீச செய்தேன்.

hardik 2

அதன்படி அழுத்தத்தை உணர்ந்த தோனி சற்று சிரமப்பட்டு தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அவர்கள் இருவரும் பேட்டிங் செய்யும்போது கிட்டத்தட்ட 5 ஓவர்கள் வரை மீட்டில் ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய எனது திட்டத்திற்கு சரியான பலன் கிடைத்தது. வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்று கூறினார் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Hardik Pandya : தோனியை விட பெரிய ஹெலிகாப்டர் சிக்ஸை அடித்த பாண்டியா – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Advertisement