ஷாகிப் தடை குறித்த கேள்விக்கு இந்திய கேப்டன் அளித்த கிண்டலான பதில் – என்ன சொல்லி இருக்காரு பாருங்க

Shakib

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கோலி, புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.

அதேபோன்று பங்களாதேஷ் அணி ஷாகிப் அல் ஹசன் இல்லாமல் இந்த போட்டியில் களமிறங்குகிறது. ஷகிப் அல் ஹசன் சூதாட்ட தரகர்கள் அணுகிய விவகாரத்தை மறைத்ததால் அவருக்கு ஐசிசி ஒரு ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதித்துள்ளது. அதனால் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தான் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் ஷாகிப் விவகாரம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித்திடம் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா தனது வழக்கமான கிண்டலான பாணியிலேயே பதிலளித்தார். அதில் ரோகித் சர்மா குறிப்பிட்டதாவது : ஷகிப் அல் ஹசன் குறித்து என்னிடம் கேட்கிறீர்கள் இதில் கருத்து கூற நான் ஒன்றும் ஐசிசி கிடையாது என்று சிம்பிளாக பதிலளித்தார்.

அவர் பதிலளித்து காரணம் யாதெனில் அவர் ஒன்றும் ஐசிசி பிராண்ட் அம்பாசிடர் கிடையாது அதனால் தான் இதில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை முறையான அறிவிக்கை ஐ.சி.சி யிடம் இருந்தே வெளியாகியது என்பதால் என் கருத்து இங்கு தேவையற்ற ஒன்று என்பதே அதன் அர்த்தம்.

- Advertisement -