டி20 வேர்ல்டு கப்புக்கு தேர்வான வீரரை அணியில் இருந்து நீக்கிய ரோகித் சர்மா – ஏன் இப்படி பண்றீங்க ?

- Advertisement -

நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டி தற்போது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பை அணிக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டிய ஒரு முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

mivsdc

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தாங்கள் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் அவரது அணியில் லலித் யாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா அணியில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசுகையில் :

டெல்லி அணிக்கு எதிரான இந்த போட்டியில் ராகுல் சாகர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் விளையாடுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

Chahar 1

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை அணிக்கு சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வரும் ராகுல் சாகர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில போட்டிகளில் சொதப்பிய ராகுல் சாகரை அவர் நம்பிக்கை கொடுத்து அணியில் விளையாட வைக்காமல் அணியில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் இவங்க 2 பேர் ரன் அடிக்கனும். இல்லனா மாட்டிக்குவாங்க – ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

இந்த நீக்கம் மும்பை ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியான விடயமாக மாறியுள்ளது. இருப்பினும் ரோஹித் ஜெயந்த் யாதவை அணிக்குள் கொண்டுவந்தது பயனளிக்குமா ? என்பது போட்டியின் முடிவில் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement