அவரிடம் நல்ல திறமை இருக்கு. அவரோட எதிர்காலமும் பிரைட்டைடா இருக்கு – இளம்வீரரை வாழ்த்திய ரோஹித்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 61 ரன்களும் கையில் மேயர்ஸ் 31 ரன்களும் குவித்தனர்.

INDvsWI

- Advertisement -

அதன் பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும், வெங்கடேச ஐயர் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

bishnoi

இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் எங்களுக்கு நல்ல நம்பிக்கை கிடைத்திருக்கிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சற்று குறைவான ஸ்கோருக்கு சுருட்டியது எங்களுக்கு நன்றாக அமைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் விளையாடிய இளம் வீரரான ரவி பிஷ்னோய் ஒரு திறமையுள்ள வீரர். அதன் காரணமாகவே அவருக்கு இந்திய அணியில் விரைவாக இடம் கிடைத்துள்ளது. அவரிடம் நல்ல திறமை இருக்கிறது. ஏகப்பட்ட வெறியேஷன், நல்ல ஸ்கில் செட் ஆகியவற்றை அவர் வைத்திருக்கிறார். எனவே எந்த நேரத்திலும் அவரை எங்களால் பயன்படுத்த முடிகிறது.

இதையும் படிங்க : போன வருஷம் 85 ரன்கள் மட்டுமே அடித்தாலும் இந்த வருஷம் 10.75 கோடிக்கு ஏலம் போன வீரர் – அதிர்ஷ்டம் தான்

நிச்சயம் முதல் போட்டியிலேயே அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இனிவரும் போட்டிகளிலும் அவரை நாங்கள் இந்திய அணியில் பயன்படுத்த உள்ளோம் என்று வெற்றிக்குப் பிறகு ரவி பிஷ்னோயை ரோகித் சர்மா வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement