ஓய்வுபெறும் நாள் சீக்கிரம் வரும். முதன்முறையாக ஓய்வு குறித்து பேசிய ரோஹித் – என்ன இப்படி சொல்லிடீங்க

Rohith
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலக கிரிக்கெட் ஸ்தம்பித்து நிற்கும் இவ்வேளையில் ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இருந்தாலும் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுடன் பிஸியாக உரையாடி வரும் வீரர்கள் தங்களுக்குள்ளேயும் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிக்கொள்கின்றனர். இந்த உரையாடல்களில் நட்சத்திர வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை மறைக்காமல் வெளியில் சொல்கின்றனர்.

Rohith

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணி வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் தங்களது கிரிக்கெட் குறித்த அனுபவங்களை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நேரலையில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா பீட்டர்சன், ஷமி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருடன் நேரலையில் கலந்துரையாடினார். இந்த உரையாடல்களில் பல சுவாரசியமான விடயங்கள் பரிமாறப்படுகின்றன.

இந்த உரையாடலின்போது ஷிகர் தவானுடன் ஓப்பனிங் செய்வது குறித்தும் இந்திய அணியில் இடம் குறித்தும் என பல்வேறு விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அதன்படி தற்போது 33 வயதாகும் ரோகித் சர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்பது குறித்தும் பேசினார். இதுகுறித்து டேவிட் வார்னர் உடன் பேசிய ரோகித் சர்மா கூறுகையில் :நாங்கள் இந்தியாவில் வளரும்போது கிரிக்கெட்டை தான் வாழ்க்கையாக கொண்டு வளர்ந்தோம்.

Rohith-3

மேலும் எங்களுடைய நினைப்பு முழுவதும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது. தற்போது 33 வயதாகும் நான் 38-39 வயது வரை கிரிக்கெட் விளையாடுவேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பிறகு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் என்னுடைய ஓய்வு 38 39 வயதில் இருக்கும் என நினைக்கிறேன் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கினார் அதன் பின்னர் ரோகித் சர்மா தொட்ட உயரம் நாம் அனைவரும் கண்டதே.

Rohith

தற்போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ள ரோஹித் இதுவரை இந்திய அணிக்காக 3 இரட்டை சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தனது அதிரடியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரோஹித்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஹிட்மேன் என்ற பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரும் எதிர்பார்க்காத இந்த நேரத்தில் ரோஹித் ஓய்வு குறித்து பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Advertisement