சேவாக் போன்று துவங்கி புஸுன்னு போன ரோஹித். ஆரம்பமே சொதப்பிடிச்சி – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று டெல்லி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்திற்கு முன்பு துவங்கியது. காற்று மாசுபட்டால் போட்டி நடக்குமா ? நடக்காதா ? என்று சந்தேகம் இருந்த நிலையில் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

IND-vs-BAN

டாஸ் போடப்பட்டு டாஸில் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது. இந்திய அணி இதுவரை 10.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை குவித்து விளையாடி வருகிறது.

துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் தவான் களமிறங்கினர். தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரி அடித்து சேவாக் போன்று அதிரடியாக துவங்கினார். அதேபோன்று 5 ஆவது பந்திலும் பவுண்டரி அடித்து கோலியின் சாதனை கடந்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் (2452) படைத்தார்.

ind 3

தொடர்ந்து சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் இறுதியில் 5 பந்துகளை மட்டும் சந்தித்து 9 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். தற்போது இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

- Advertisement -